சுதந்திர மூச்சுக்காற்றை சுவாசித்தோம்
பேச்சுரிமை எழுத்துரிமை பெற்று வளர்ந்தோம்
சுதந்திர இந்தியாவில் பழமொழி பேசினாலும்
சகோதரி சகோதர உணர்வாய் நேசிக்கிறோம்
சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை
வணங்கி அவர்கள் வழியில் நடக்கிறோம்
சுதந்திரமாய் பறக்கும் பறவைகள் போல்
எல்லா துறைகளிலும் கால் பதிக்கிறோம்.
வேற்றுமையில் ஒற்றுமை நம் இந்தியா
வெல்லும் உறுதி பெற்றது இந்தியா
மாற்றங்களை வரவேற்கும் நம் இந்தியா
மாதரை மதிக்கும் நம் இந்தியா
ஏற்றங்கள் ஏணியாய் நாம் இந்தியா
எத்தரை ஓட வைக்கும் இந்தியா
ஆற்றல் அரவணைப்பு ஆன்மீகம் இந்தியா
அன்பை பண்பை போதிக்கும் இந்தியா.