சாயம் போவதில்லை
என்றும் சாயங்கள்
சாயம் போவது என்றும்
சலவைத் துணிகள் தான்
இருக்கின்ற வண்ணம்
போதாமல் இன்னமும்
வேண்டும் என்று
ஒட்டாத வண்ணத்தை
ஒட்டவைத்து விற்றதனால்
ஒரே சலைவையில்
ஒட்டாமல் சாயம்
போனது சலவைத்
துணிகள்…
சாயம் போனவை
துணிகள் மட்டும்
அல்ல
நாமும் தான்
சாயம் போனவர்களாய்
வெளுத்துப் போனவர்களாய்
மாறிக்கொண்டு இருக்கிறோம்
கலாசார மாற்றத்தில்
வெளிநாட்டு மோகத்தில்
பண்பாட்டு மாற்றத்தில்
இனம் மறந்து
மொழி மறந்து
பண்பாட்டை இழந்து
கட்டுப்பாடு இல்லாமல்
தனிமனித ஒழுக்கம் தெரியாமல்
மனிதத்தையே இழந்து
சாயம் போய் கொண்டு
இருக்கிறோம்
நாம்/
தனித்தனியாக இருக்கும்
வரைதான் வண்ணங்கள்
அவை அனைத்தும்
ஒன்றாய் இணைந்துவிட்டால்
கருப்புதான் கடைசியில் மிஞ்சும்
அதைப் போலத்தான்
ஒவ்வொரு இடத்திற்கும்
ஒரு பண்பாடு உண்டு
ஒவ்வொரு நாட்டுக்கும்
ஒரு கலாசாரம் உண்டு
அவை தனித்து நிற்கும்
போது தான்
ஜொலித்து நிற்கும்
அத்தனையும்
ஒன்றிணைத்தால்
மொத்தமும் கலந்து
தன்மையை இழந்து
நாற்றம் சேர்ந்து
சாக்கடை யாகிவிடும்
அதுதான் இங்கு நடந்து
கொண்டு இருக்கிறது
நம் கலாசாரத்தை நாம்
காப்பாற்றுவதும் இல்லை /
மற்றவர் கலாசாரத்தை
நாம் கடைப்பிடிப்பதும் இல்லை
எல்லாவற்றையும்
சேர்க்க எண்ணி
எதுவுமே இல்லாமல்
போய்க் கொண்டு இருக்கிறோம்
பருத்தியின் வெண்மை
சாயம் போவதில்லை
கதராடையின் காவி
கரைந்து போவதில்லை
நம் பண்பாடு கடையில்
வாங்கிய சாயத்துணிகள்
அல்ல /
அவைகள் நம்
முன்னோர்களின் உழைப்பில்
விளைந்த பருத்தித் துணிகள்
பண்பாட்டைக் கற்றுக்
கொள்ளுங்கள்
கலாசாரத்தைப்
பெற்றுக் கொள்ளுங்கள்
நம் நாட்டிற்கு
பருத்தியும் , காவியும்
சிறந்தது என்று
கண்டிப்பாக
உணர்ந்து கொள்வோம்.