நட்பின் ஆழம்
ஆசையின் ஆழத்தை
தேடுதலின்போது அறிந்து கொள்ளலாம்
காதலின் ஆழத்தை
பிரிவின் போது அறிந்து கொள்ளலாம்
நட்பின் ஆழத்தை
துயரின் போது அறிந்து கொள்ளலாம்
நேர்மையின் ஆழத்தை
நெருக்கடியின் போது அறிந்து கொள்ளலாம்
நம்பிக்கையின் ஆழத்தை
தளர்வடையும் போது அறிந்து கொள்ளலாம்
ஒழுக்கத்தின் ஆழத்தை
கட்டுப்பாட்டின் போது அறிந்து கொள்ளலாம்
இப்படி எல்லா ஆழத்தையும்
அறிந்து கொள்பவன் தான்
உயரத்தில் பயமின்றி
பக்குவமாய் பதட்டமின்றி
பயணம் செய்து
நிலைத்து நிற்க முடியும் .
-ச. ம.பாலகிருஷ்ணன் ,சென்னை
சிறுவர் பாடல்
நாடு புகழணும்
அன்னை தந்தையை வணங்கணும்
அவர்கள் பேச்சைக் கேட்கணும்
அன்பாய் இருக்கப் பழகணும்
அகிலம் போற்ற உழைக்கணும்
கல்வி நீயும் கற்கணும்
கலைகள் யாவும் வளர்க்கணும்
கருணை பொங்கும் இதயத்தில்
கலைமகள் அருள் கிடைக்கணும்
உண்மை பேசி உயரணும்
உன்னை நாடு புகழணும்
உதவும் குணம் இருக்கணும்
உறுதி கொண்டு வாழணும்
சுறு சுறுப்பாய் இருக்கணும்
சுற்றுச் சூழல் காக்கணும்
சுருங்கச் சொல்லி விளக்கணும்
சுகமாய் வாழக் கற்கணும் .