விடுதலை விடுதலை விடுதலை அடிமை
கொண்ட வெள்ளையன் வெளியேற ஒன்றுபட்டு
வாடும் மக்கள் குரல் எழுப்பி வீறுகொண்டு எழுந்த போது விடுதலை.
அடிமை பட்ட இந்தியா கப்பம்
கட்டும் போது கணக்கில்லா செல்வத்தை
தடிப்பிடித்த காந்தி கொள்கையில் நின்றவர் கப்பல் வாங்கி கடலில்விட்டு வென்றவர்.
வழக்குத் தொழில் செய்த போதும்
வாழ்வு இழந்து தேசம் காத்தவர் இழந்த பொருள் அனைத்தும் என்றாலும்
வலிமை கூடி எதிர்த்து நின்றவர்.
அடிப்பட்டு இடிபட்டு இன்னல் பட்டபோதும்
மனம் இடிந்து போகாமல் எதிர்த்தவர்
முடி நரைத்து முதுமை வந்த போதும்
சிறை சென்று செக்கிழுத்த செம்மல்.
வலி பொருத்து ரத்தம் சிந்தி பொலிவு இழந்த போதும் வீறுகொண்டு
பொழிவு பெற்று பொங்கி எழுந்து
எதிர்த்து நின்ற வேங்கை அவர்
அமர்ந்து இருந்து பல நூல்கள் படைத்து தந்த வழி வகுத்தவர் அமரர் ஆனபோதும் கூட நம் மனதில் நிற்கும் கப்பலோட்டிய தமிழன்.