காலத்தின் கண்ணாடி கவிதை!
இயற்கையை
ரசிப்போம்! கவிதையில் நேசிப்போம்!
செந்தமிழ் வாணி
டாக்டர் ச. மல்லிகாவின்
ஹைக்கூ கவிதைகள்
கண்ணாடி
முகம் பார்க்கிறது
திருஷ்டி கண்ணாடியில்
சிட்டுக்குருவி.
ரோஜா
குத்தினாலும்
சிரிக்கிறது
ரோஜா மலர்.
மாநாடு
மின்சாரக் கம்பிகளில்
குருவியின்அணிவகுப்பு
மாநாடு.
மனிதம்
மூழ்கும் கப்பலாய்
துன்பம் வந்தாலும் உதவும் குணம்.
பச்சோந்தி
நிறம் மாறுகிறது மனிதனின் எண்ணம் பச்சோந்தி.
எறும்பு
இராணுவ அணி வகுப்பு
அதிரடி சேமிப்பு
எறும்பு.
கொடை
எடுத்த நீரை திருப்பிக் கொடுப்பது
மழை.
வறுமை
பெற்ற குழந்தையை
விற்க நினைத்தாள்
தாய்.
நிழல்
விலகாது
இன்ப, துன்பத்தில்
நிழல்.
பயணம்
உறவும், நட்பும்
வளம் சேர்ப்பது
பயணம்.
தொடரும்