செந்தமிழ் வாணி
டாக்டர் ச மல்லிகாவின்
ஹைக்கூ கவிதைகள்
கண்ணாடி
வாழ்க்கை
வீழ்ந்தாலும்
எழுந்து நிற்பது வாழ்க்கை.
அழகு
இருட்டில் நிலா
கருப்பு பெண்ணின்
மனம்.
பெண்
மண்ணாய் மிதித்தாலும் பொன்னாய் மதித்தாலும் ஏற்பவள் பெண்.
பூட்டு
வீட்டுக்கு காவல்
வாய்க்கு…..
மௌனம்.
மணல் வீடு
கட்டுவதே இடிப்பதற்காக இடியாமல் இருப்பது சந்தோசம்.
நிறம்
மண்ணின் நிறம் நீரில் எண்ணத்தின் வடிவம் மனதில்.
காகிதப் பூ
கண்ணுக்கு காட்சியாய் நகர்….. புற
வாழ்க்கை.
மரபுக் கவிதை
முன்னோர் தந்த தமிழனின் சொத்து
மரபு பா.
சிலை
காலங்கள் கடந்தாலும்
நினைவில்
சிலை.
மனசு
உடல் கூட்டின்
உயரிய….
பெட்டகம்
தொடரும்