தைத் திருநாள் தைத்திங்கள் முதல் நாள் 
தன்மானத் தமிழ் இனம் கொண்டாடும் திருநாள் 
தமிழ்நாடு போற்றி வணங்கும் நன்னாள் 
தலையாய் வரவேற்கும் உழவுத்திருநாள்.
பண்பாட்டின் மரபாய் பழமையைக் களைந்து 
பேதமின்றி புன்னகைப் பொங்க மகிழ்ந்து 
புத்தரிசிப் பொங்கலிட்டு சுவைமணக்க இன்பமுடன் 
பகிர்ந்துண்டு ஒன்றேகுலமாய் பேணும் இந்நாள் 
செங்கரும்பின் சுவையாய் செந்தமிழ்ப் பால் பாடி 
செழுங்கிளைச்  செல்வமாய் செம்மொழியின் வளமாய் 
புத்துலகைப் படைப்போம் நன்னெறி காப்போம் 
புத்தாண்டுப் பொங்கலை கொண்டாடிமகிழ்வோம் 
Share.

Leave A Reply