வாழ்க்கை என்னும்பயணத்தில் சிறகடிஎதிர்த்து வா!த்து பறந்த நான்
திரும்பிய என் கண்களுக்கு பழைய சுவடி தெரிகிறது!
முயற்சி என்னும் பாதையில் முட்கள் தான் எத்தனை?
விலக்கி மேலே வரத்தான் விடியல்கள் எத்தனை…எத்தனை?
மர இலைகள் உதிரும்
மறுபடி அவை தளிரும்
இடையில் வரும் தடங்கள் தவிடு பொடி ஆகும்.
மலர்களைப் பார் தெரியும் உதிர்வதற்கு முன் வித்தாகும் மழையைப் பார் புரியும் ஒவ்வொரு துளியும் பிறருக்காக
கரை சேர் என்று
கடல் அலைகள் நிற்குமா? எதிர்நீச்சல் போட்டு
எதிர்த்து வா… புரியும்.