செந்தமிழ் நாடு சிறந்த நாடு என்போம்
உழவர் நலத்தில் கவனம் செலுத்துவீர்
இன்னல்கள் எத்தனை வந்தாலும்,இழுபறியாக இருந்தாலும்
அத்தனையும் கண்டு அமைதிகாக்க வேண்டும்
உணவு பயிர் விளைத்தே உயிர் வாழும் உழவன்
வானம் பொய்த்தால் வருந்தி மடிகிறான்
கிழிந்த ஆடையும், மெலிந்த உடலும்
நலிந்த வாழ்க்கையில் இழிந்தநிலை அடைகிறான்
காவிரித்தாய் கண்ணீர் வடிக்கிறாள்
வறட்சியைக் கண்டு வருந்தி நிற்கின்றான்
வாடிய பயிரைக்கண்டு விவசாயி தினமும் மடிகிறான்
தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படுமா ?
வீட்டுக்கு ஒரு விவசாயி இருந்தும் வீணாகிறது வாழ்க்கை
வாழ்க்கை என்பது உலகில் துன்பமயமானது
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
அத்தனையும் சவாலாக ஏற்பதே மன உறுதி
தற்கொலை என்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்
அன்னையை இழந்தாலும் அநீதி நம் மீது வந்தாலும்
நாட்டையும் வீட்டையும் இழந்தாலும்
தற்கொலையே வேண்டாம்
உழவர் நிலையை ஓங்கிடச் செய்வோம்
உழவுத் தொழிலே மக்களின் உயிராம்/
சுழலும் உலகில் உழவே தலையாகும்
உழவால் உலகைக் காப்பவன் உழவன்
உள்ளத்தில் வைத்து அவனைப் போற்றுவோம்-ஒளியை
உழவன் வாழ்வில் ஏற்றுவோம்