வேலைக்குத் தூங்கி எழு மூளைக்கு வேலை கொடு

முயன்று நீ முன்னேறு இல்லையேல் நீ மண்ணோடு

கண் இமைக்கும் நேரத்தில் உன்னை கடந்து போக
கூட்டம் இருக்கும் போது
எப்படி நீ கவலையின்றி தூங்கிக் கொண்டு இருக்கிறாய்?

நீ! தூங்குவதற்கு அவசியம் என்ன?
என்ன செய்து களைத்தாய்!
நீ! விழித்து எழுதுவற்குள் எல்லாம் முடிந்து விடுமே!

இரவில் உறங்குவதே இப்போதெல்லாம் அரிதாகிப் போய்விட்ட சமயத்தில் பகலிலேயே உறங்குகிறாயே!

உழைப்பில் நேரம் முற்றி உதிரத்தில் வேர்வை சொட்டி களைப்பு கண்ணைக் கட்டி படுத்தால் தான் உறக்கம்.
வாய் வரை வயிறு
முட்ட தின்று… தின்று படுத்துருண்டால்
அதற்கு என்ன பெயர்?

உறக்கத்தை தள்ளி வை சோம்பலை கொல்லி வை வெற்றியை சொல்லி வை.

Share.

Leave A Reply