அகரத்தில் எழுந்த அன்னைத் தமிழ்
ஆய்வு செய்யும் என்ன அலையில்
சிகரத்தில் உயர்த்தி உயர்வு கொள்ள
சித்தம் திண்ணமாய் செயல் பட
மகராலயம் ஓயாத உழைப்பது போல்
மார்க்க நெறியில் நிமிர்ந்து நின்று
உகரத்தில் எழுந்த உயிர் மூச்சாய்
மொழிக்கு உரக்க குரல் கொடு.


வள்ளுவன் தந்த திருக்குறள் உலகம்
முழுமைக்கும் பரவ வழி வகுத்து
பிள்ளைத் தமிழ் எழுச்சி கண்டு
விரும்பும் மொழியாய் பாடத்தில் வைத்து
கொள்ளை இன்பம் தரும் ஈரடி
இனிமை பொங்கும் மன நிறைவில்
வெள்ளை உடையணிந்த பாரத அன்னைக்கு
தேசிய நூலக்க குரல் கொடு.


உண்மைக்கு என்றும் குரல் கொடு
உரிமைக்கு என்றும் குரல் கொடு
திண்ணம் கொண்டு குரல் கொடு
திண்மை கொண்டு குரல் கொடு
பண்புக்கு என்றும் குரல் கொடு
பகுத் தறிவுக்கு குரல் கொடு
மண்ணுக்கு என்றும் குரல் கொடு
நீதிக்கு உரக்க குரல் கொடு.

Share.

Leave A Reply