இழந்து கொண்டு இருக்கிறோம்!
எவ்வளவு இனிமைகளை இழந்து கொண்டு இருக்கிறோம்!
எதிர்பாராத நட்பு
குழந்தைச் சிரிப்பு
பெண்ணின் வெட்கம்
வெட்கம் மறைக்கும் திமிர்
இயல்பான மொழி
இயற்கை குணம்
வெகுளித் தனம்
காலை சூரியன்
பனி விழும்
முன் நுனி இலை
ஆட்டு மந்தை
குட்டிச் சந்தை
பசு கூட்டம்
கன்றின் குறும்பு
குயிலின் பாட்டு
முயலின் பதுங்கல்
ஒற்றையடிப் பாதை
சத்தம் இல்லாத தனிமை
கூரை வீடு
சாணித் தெளிப்பு
மாக்கோலம்
மண் அடுப்பு
பானைச் சோறு
வயல் வரப்பு
விரிந்த திண்ணை
வளர்ந்த தோப்பு
கயிற்றுக் கட்டில்
கலையாத உறக்கம்
இன்னும்… இன்னும்
எத்தனை.. எத்தனை
எத்தனை… உண்டு.
அத்தனையும்
இழந்து விட்டு
எதற்காக
இப்படி நகர (நரக)
வாழ்க்கை.
சிரிப்பைத் தொலைத்து சிகரத்தைத் தொடவா? மனதைத் தொலைத்து மாளிகை கட்டவா?
இதயத்தை இரும்பாக்கி கின்னசில் இடம் பிடிக்கவா? பெற்றோரை இழந்து
முதியோர் இல்லம்
கட்டவா?
ஒரே குழந்தையை வெளிநாட்டிற்கு
வேலைக்கு
அனுப்பத்தானே!
ஓய்வு இல்லா
உழைப்பில்
இயந்திரமாய்
அனைத்தையும்
இழக்கிறோம்.
நம்மையே நாம்
இழக்கிறோம்
எதற்காக…!
எதை அடைவதற்காக? இத்தனையும் இழக்கிறோம்.