பச்சை பச்சை செடிகளைப் பார்த்து பார்த்து ரசிக்கலாம் வண்ண வண்ண மலர்களை கண்டு நாமும் மகிழலாம்.
உயர்ந்த உயர்ந்த மரங்களை உவகை யோடு ரசிக்கலாம் உலவும் தென்றல் காற்றுடன் உளம் மகிழ்ந்து பாடலாம்.
கூவும் குரலை கேட்கலாம்
ஆடும் மயிலை பார்க்கலாம் பறவை பாடும் சங்கீதம்
பரவசப் படுத்தும் சந்தோசம்.
துள்ளித் திரியும் ஆட்டையும் புல்லை மேயும் மாட்டையும் தெளிந்த ஓடை நீரையும்
காத் திருந்து பார்க்கலாம்.
குளிர்ந்த நீரின் குளிர்ச்சியை குளித்து குளித்து மகிழலாம் கொட்டும் மழை தூரலில்
நனைந்து நாமும் ஆடலாம்.
வான வில்லைப் பார்க்கலாம் மின்னும் மின்னலைப் பார்க்கலாம்
இடிச் சத்தத்தைக் கேட்கலாம்
இன்பமாய் நாம் பாடலாம்.