உடல் உறுதியோடு
மன வலிமையோடு
இயற்கை வளங்களோடு மகிழ்ச்சியோடு

சிறந்த பண்பாட்டோடு சீர்குலையாத சமுதாயத்தோடு சுவையான உணர்வோடு சுத்தமான காற்றோடு

சுகாதாரமான நிம்மதியோடு வருங்கால அறிவியலைப் பற்றி சமுதாய வளர்ச்சி
பற்றி எண்ணி எண்ணி
கனவு கண்டீர்களே…

இன்று உங்கள்
கனவுகள் எல்லாம் நினைவாகி விட்டது.

இந்த நிஜத்திற்குள்
நிம்மதி இன்றி
உங்களை போல
வாழ முடியாதே..

என கனவு
கண்டு கொண்டு
இருக்கிறோம்
நாங்கள்.

Share.

Leave A Reply