எப்படி பிறப்பெடுக்கும் என்று எவருக்கும் தெரியாது எப்படியும் உருவெடுக்கும் எல்லை கிடையாது.

விதை என்று எதுவும்
தேவை இல்லை
உணவென்று எதுவும் பேதம் இல்லை
உருவெடுத்துக் கொண்டே இருக்கும் .

உயரம் காண முடியாதபடி எங்கோ பார்த்த ஏதோ ஒரு பார்வையில் யாரோ சொன்ன ஏதோ ஒரு வார்த்தையில் எப்போதோ பிறந்திருக்கும்

அது எதைப் பற்றியும்
கவலைப் படாமல்
எப்படியோ வளர்ந்திருக்கும்

ஒவ்வொரு நாளும் உருமாறும் ஒவ்வொரு முறையும் நிறம் மாறும்
இதுதான் எல்லை என்று கோடிட்டு சுவர் எழுப்பும்.

அங்கு போய் நின்றாலோ முடியாமல் அது நிலைக்கும் அழகாய் வலை விரிக்கும்

இதுதான் பெரிதென்று இழுத்துப் போகும்
அதைவிடப் பெரிதென்றை எடுத்துக் காட்டும்
இருக்கும் பிரச்சனைக்கு எல்லாம் அதுவே வித்திடும்.

எதிலும் சிக்காமல் அழகாய் தப்பிடும்
அழியாமல் ஆட்சி செய்யும் அணு அணுவாய் ஆட்டிப் படைக்கும்
உனக்குள் இருக்கும்
ஆசைத் தீ !

ஆசைத் தீ அதனின்
நீயும் எரிந்து விடாது
உன்னைப் பாது
காத்துக் கொள்.

Share.

Leave A Reply