பசுமையான புல் தரை நான்கு பக்கமும் நடப்பதற்கு பாதை இருந்தது.

சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் சறுக்கல் உடற்பயிற்சி செய்யும் வளையம் என சிறுவர்கள் விளையாடும் மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

பசுமையான புல்லைச் சுற்றி அடர்ந்த குட்டையான மரங்கள் குடை போல் நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது.

அதன் அருகில் ஓய்வாக அமர இரும்பு அமர்வு இருக்கை இருந்தது.

அதில் சிலர் அமர்ந்து சிறுவர்கள் விளையாடுவதை கண்காணித்து கொண்டு இருந்தார்கள்.

தாத்தா மணி பேத்தி நிலாவும் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

உருட்டியும் காலால் எத்தியும் பந்தை தூக்கிப் போட்டும் என விளையாட்டு கலை கட்டியது.

எதிர்பாராத விதமாக பெரிய பந்து மரத்தின் நடுவில் விழுந்து விட்டது.

உயரமான மரம் எப்படி பந்தை எடுப்பது?

மரத்தை அசைத்துப் பார்த்தார்கள் பந்து விழவில்லை.

பந்து இலைகளுக்கு நடுவில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு ஓய்வு எடுத்தது அடி வாங்கிய
களைப்பில்.

நிலா பந்து வேண்டும் என அழ ஆரம்பித்து விட்டாள்.

என்ன செய்வது என யோசித்த தாத்தா கையில் வைத்திருந்த சிறு பந்தால் மெதுவாக அடித்தார்.

பந்த நகர்ந்து நடுவில் போய்விட்டது.

மேலும் மேலும் அடித்தார் தாத்தா. பந்து காற்றடித்த பக்கம் தொப் என விழுந்தது.

நிலா கைதட்டி சிரித்தபடி ஓடிப்போய் பந்தை எடுத்தாள்.

Share.

Leave A Reply