(ஐந்தாம் மாதத்தில் குப்புறப்படுத்து இரு கைகளையும் தரையில் ஊன்றி கால்களை நீட்டி…. மடக்கி உந்தி நகர்ந்து தலை அசைய பார்த்து சிரித்து ஆடும் பருவம்)
1-பாலமுதம் பலாச் சுளை சுவையுடன்
முக்கண்ணன் கண்ணன் அருளும்
வேலமுகன் புன்சிரிப்பு யானை முகன் அன்பும்
பெற்ற செல்வமே மணிகண்டா
பாலகன் மகனாய் வளர்ந்து சிறுபிள்ளை
அன்புக்கு ஏங்கும் பிள்ளை தாலாட்டு கேட்டாலும் புரியாத குழந்தை
செங்கீரை ஆடு வீரே!
2-பட்டத்து அரசரும் அரசியும் மக்களும்
அன்புடனே வளர்த்து வந்தனர்
கொட்டுதல் முழங்கி பெயர் வைத்தனர்
கொழுமை அழகு வளரக் கண்டு
சேட்டை செய்யும் அழகு கண்டு
சுத்தியும் போடுவர் பணிப் பெண்கள்
கோட்டை கோமான் வணங்கும் மணிகண்டா
செங்கீரை ஆடு வீரே!
தாய்க்கு தலைவலி என்று சொல்லி காட்டுப்
புலிப் பால் வேண்டும் என்றார் உயிர்நிலை துச்சமாய் எண்ணிய மணிகண்டா
வானகம் சென்றான் சிறு பிள்ளை
செயிர் தீர்க்கப் புறப்பட்டான் மணிகண்டன்
செல்லமாய் வளர்ந்த சிறு பிள்ளை
செயிழை துயர் துடைத்த மணிகண்டா
செங்கீரை ஆடு வீரே!
4-மக்கள் குறை போக்கப் பிறந்தவரே
மாணிக்கத் தொட்டியில் துயிலும் மணிகண்டா
சிக்கல் வந்தது அரசிக்கு
தன்பிள்ளை
முடி சூட வேண்டும் என்று விக்கல் வந்தாலும் அம்மாவை நினைக்கும்
மணிகண்டன் பாசம் உலகம் அறிய
தக்கரம் சூழ்ச்சி தகர்த்து எறிந்து
செங்கீரை ஆடு வீரே!
5-பக்தர் வணங்கும் சபரி ஐயப்பனே
கன்னிச் சாமியான சிறு பிள்ளையே
சிக்கிமுக்கி கல்போல் வந்த நெருப்பால்
புலிப் பால் கொண்டு வர சிக்குத் தெரியாமல் பால பிள்ளாய்
சிட்டாய் தெரியாமல் கானகம் நோக்கி
திக்குத் தெரியாமல் அலைந்த பிள்ளாய்
செங்கீரை ஆடு வீரே!
6-திருமணமே செய்யாத கன்னிச் சாமி
திருமணத் தடைகளைத் தகர்த்து தெரிவார்
குருகுலம் செல்லாத கன்னிச் சாமி
குடும்பமாய் வரவைத்தார் குரு சாமியாக்கி
திருவுளம் நிறைந்த கன்னிச் சாமி
திருவடி வணங்கச் செய்த சாமி
திருநீர் பூசி வர வைப்பவனே
செங்கீரை ஆடு வீரே!
பற்று இல்லா வாழ்வை ஏற்று
படிப்பினை தரும் மணிகண்ட வாசனே
சுற்றம் துறந்து துறவியாய்ஆகி
பிறர் துயர் துடைக்கும் சாமியாகி
வற்றாத சீவநதி போல் பாய்ந்து
பிறர் இன்னல் போக்கும் கன்னிச்சாமி
முற்றிய தேங்காயில்
நெய்சுமந்து விளக்கேற்ற செங்கீரை ஆடு வீரே!
8-கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய்
கானகம் நடந்து வரும் பக்தர் தக்காரை தான் காத்து வருவர்
தடைகள் தாண்டி வணங்க வருவர்
பிக்கள் எல்லாம் பின்னால் செல்லும்
ஐயன் ஐய்யனே காத்து வருவர்
வாக்குத் தந்து தடைகள் தகர்த்த
செங்கீரை ஆடு வீரே!
9-சிறுபிள்ளை செல்வனிடம் அன்பு செய்து
அமுதூட்டி பாலூட்டி கொஞ்சி மகிழ
உறுப்படைக்கி நேசம் கொண்டு மலை
ஏறி மனம் மகிழ்ந்து வருவர் ஏறுதல் வாழ்வில் படிப்படியாக உயர
ஏற்றம் தரும் சபரி ஐயப்பனே மாறுதல் வேண்டி மலைக்கு வருவர்
செங்கீரை ஆடு வீரே!
10-அம்மா கையில் தூக்கிக் கொஞ்ச
அன்புடன் கைகால் ஆட்டிக் காட்டில்
உம்மை வணங்கும் பக்தர்க்கு ஆதரவாய்
எப்போதும் ஞான ஒளி தரும் மெய்மை நிறைந்த திரு உருவே
கள்ளம் இல்லா பொக்கை வாய்ச்சிரிப்பே
செய்கை கண்டு மெய் சிலிர்க்க
செங்கீரை ஆடு வீரே.