மலேசியாவின் தலைநகர் கோலாம்பூரில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது பத்துமலை முருகன் கோயில்.

தம்புசாமி பிள்ளை என்ற செல்வந்தரால் 1891ம் ஆண்டு இந்த பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது. 1920ல் குகைக் கோயிலுக்கு செல்ல மரக்கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன.

குகைக்கோயில் 100 மீட்டர் உயரத்தில் உள்ளது. உலகிலேயே உயரமான முருகன் சிலை என்ற பெருமை இந்த பத்துமலை கோயிலுக்கு உள்ளது. முருகன் சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140 அடி.

இந்த முருகன் சிலையை செய்ய 25 லட்சம் மலேசிய ரிங்கட் செலவாகியுள்ளது. சிலை திறப்பு விழாவின் போது 15 ஆயிரம் ரிங்கட் மதிப்பில் சாமந்திப் பூமாலை சூடப்பட்டது.

ஒரு டன் எடையுள்ள அந்த மாலை பளு தூக்கும் இயந்திரத்தின் உதவியோடு முருகனுக்கு அணிவிக்கப்பட்டது.

 

 

 

சிலையை உருவாக்குவதற்கு 250 டன் எக்கு கம்பிகள், 1550 கன மீட்டர் சிமெண்ட், தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராஜன் தலையில் முருகன் சிலை உருவாக்கப்பட்டது.

இந்த சிலையை காண்பதற்காக 2012ம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மலாய் மக்களும், சைனீஸ் மக்களும் தங்களுக்கென மசூதிகள், கோயில்களை கட்டி உள்ள நிலையில், தமிழர்களும் அங்கு தங்கள் தனித்துவத்தை விளக்கும் வகையில் தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு கோயில் கட்டியுது வரலாற்று சிறப்பு மிக்கது.

ஓம் சரவண பவ திரு முருகா. 

Share.

1 Comment

Leave A Reply