சாவி கொடுத்த பொம்மை
கைதட்டி ஆடும் போது
தாவி வந்த சிறுவன்
தன்கையில் எடுத்து மகிழ்வான்
தேவி அருளால் முருகன்
வேல் பிடித்த கைகள்
புவி காத்து மக்கள்
குறை போக்கி மகிழ்வான்.

மண்ணில் ஓடி விளையாடி
ஒளிந்து மறைந்து பிடிப்பாய்
விண்ணில் போர் செய்து
விட்டுக் கொடுத்து பிடிப்பாய்
கண்ணில் கண்ட பொருளைக்
கேட்டு வாங்கும் வயதில் எண்ணத்தில் உயர்ந்து தனித்து
நின்று அருளும் முருகா!

உன் விளையாட்டு எல்லாம்
திரு விளையாடல் தானே தன் தந்தைக்கு தப்பாத
திரு மகன் தான்
சின் மயமான முருகா
சிந்தனையில் என்றும் நிற்பாய்
நின் அருளைக் கொஞ்சம்
விளையாட்டாகத் தருவாய் முருகா.

Share.

Leave A Reply