ஆறாம் படை வீடு
பழமுதிர்ச்சோலை
பல்லவி
பழம் நீயப்பா! என்ற ஔவைக்கு
பழம் கொடுத்த முருகா!
(பழ)
அனுப்பல்லவி
சுட்ட பழமா? சுடாத பழமா? எனக் கேட்டு கொடுத்த முருகா! (பழ)
சரணம்
பழம் உதிர் சோலை முருகா
பழம் முதிர் சோலை முருகா
வலம் வரும் பத்துக்கு எல்லாம்
நலம் தரும் வெற்றி வேலா (பழ)
சரணம்
வள்ளி தெய்வானை உடன் நின்ற முருகா வல்லமை தந்து அருளும் முருகா
மயில் வாகனத்தில் அமர்ந்த முருகா
மனதில் நிலையாய் நின்ற முருகா! (பழ)
