தாமரையில் அமர்ந்த தங்கத் தாமரையே
    தடகத்தில் எழுந்த முருகா!
சாமரம் வீசி வளர்த்த பெண்கள்
       சாமத்தில் வரும் நட்சத்திரங்கள்!
தாமதம் இன்றி நலன் செய்ய
     தரணியில் பிறந்த முருகா!
கோமாதா போல் பிறரை காக்கும்
      கோல மயில் முருகா.

Share.

Leave A Reply