சேவை செய்தால் செய்வது தெரியாமல்
ஆனந்தம் வந்திடும் முருகன்!
பாவை உனக்கு சேவகம் செய்ய
பாக்கியம் பெற்றேன் முருகா!
தேவை இவ்வுலகில் இல்லை முருகா
தேர்ந்தெடுத்தேன் பாத மலரடி!
கோவைப் பழயிதழ் சிரிப்பில் உந்தன்
பாதம் பணிந்தேன் முருகா.