பட்டாடை கட்டி ராஜனாக நின்றாலும்
காவி தரித்தாலும் முருகா!
உட்சொல் கேட்க வந்தேன் முருகா
உன்னருள் புரிந்தேன் முருகா!
கட்டாயம் நீ வரவேண்டும் முருகா
காணும் பொருளில் நிறைந்து!
தட்டான் தங்கத்தேர் செய்து விட்டான்
அமர்ந்து உலாவர வாமுருகா.