மந்திகள் மரம் தாவும்மலை.
மலர்கள் பூத்தாடும் மலை உந்தி பறந்தாலும் மலை
உணர்வில் நிலைத்தாடும் மலை
சந்தி வேல்பிடித்த மலை
சக்தி ஆற்றல் தந்தமலை முந்தி முடிவெடுத்த மலை
முருகன் குடியிருக்கும் மலை

குறத்தி குறிசொன்ன மலை
வேடவர் வாழும் மலை குறவள்ளி திணைகாத்த மலை
திகட்டாத தேனிருக்கும் மலை
உறவாய் மனம்புரிந்த மலை
உறுதியாய் கைபிடித்த மலை
இறவியாய் இணைந்த மலை
இன்பமாய் உலாவிய மலை

குயில்கள் கூவும் மலை
குருவிகள் பாடும் மலை மயில்கள் ஆடும் மலை
மந்திகள் தாவும் மலை ஒயில் ஆடும் மலை
ஒன்றாய் கூத்தாடும் மலை அயில் அழகான மலை
அமர்ந்து வணங்கும் மலை.

Share.

Leave A Reply