திருப்பரங்குன்றம்
பல்லவி
குன்று தோறும் இருந்தாலும் முருகா! திருப்பரங்குன்றம் போல் ஆகுமா முருகா! (குன்று)
அனுப்பல்லவி
யானை முகன் தம்பியே முருகா!
தெய்வானையை மணம் புரிந்தாய் முருகா!(குன்று)
சரணம்
சிவனின் மைந்தனே முருகா
இந்திரன் மருமகனே முருகா
மணக்கோலம் கொண்ட முருகா
மயிலேறி வந்தவனே முருகா! (குன்று)
சரணம்
மரங்கள் பூக்கும் குன்று மந்திகள் தாவும் மரங்கள் மழலை மகிழ்வர் கண்டு மனதெல்லாம் நிறைந்த முருகா. (குன்று )