தமிழ் கடவுள் முருகனின் உபேதேசங்களை எளிய தமிழில் அனைவரும் அறியும்படி கவிஞர் ச.மல்லிகா அவர்கள் இங்கு தொகுத்து உள்ளார். முருகனின் அருளுரை அனைவரும் படித்து பயனடைவோம். குருவே சரணம்.

உலக வாழ்க்கையை
சிறப்புற நடத்திச்
செல்ல நினைப்பவர்
தனது சக்திகளை
அறிதல் அவசியம்

உள்ளத்து உணர்வு
உடம்பில் பிரதிபலிக்கும்
மன ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம்
மனக் கட்டுப்பாடே
உடல் பண்பு

ஒருவனது பலவீனம்
பாசம் பாசத்தைப்
பயன் படுத்தி
அவனை வீழ்த்த
நினைப்பர் மற்றவர்
குருவே சரணம்

ஆசை அற்றவராக
பற்றற்ற நிலை
அடைந்தவர்க்கு தெய்வத்
தன்மை தோன்றி
வணங்கப் படுவர்

நிரந்தரமற்ற பொருளின்
நிரந்தரமற்ற மகிழ்ச்சியை
வேண்டி நிற்பது
மாயை

சிகரத்தை தொடவும்
கனி கொய்யவும்
முயற்சி என்ற
துன்பத்தை அனுபவித்தால்
சுகம் கிடைக்கும்

பரிட்சை எழுதி
மதிப்பெண் பெற்றவனுக்கு
வெற்றி கிடைக்கிறது
சோதனையில் வென்றவனுக்கே
முருகனின் அருள்
கிடைக்கிறது.

Share.

Leave A Reply