மதுரைக்கு தென் மேற்கில் திருப்பரங்குன்றம் கி.பி.773 இல் பராந்த நெடுங்சடையன் கருவறை குகை கோயில்.765-815-ல் பாண்டிய மன்னர், நாயக்கர் கால குடைவரைக் கோயில்.முருகன்,தெய்வயானை திருமணத்தை பிரம்மா நடத்தி வைக்க இந்திரன் ,சிவன், பார்வதிக்கு தாரைவார்த்து கொடுத்த இடம். திருப்பரங்குன்றம் முருகன் என்றும் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
பல்லவி
குன்று தோரும் இருந்தாலும் முருகா
திருப்பரங்குன்றம் போல் ஆகுமா முருகா (கு)
அனுபல்லவி
யானை முகன் தம்பியே முருகா
தெய்வானையை மணம் புரிந்தாய் முருகா (கு)
சரணம்
சிவனின் மைந்தனே முருகா
இந்திரன் மருமகனே முருகா
மயிலேறி வந்தவனே முருகா
மணக்கோலம் கொண்டாய் முருகா (கு)
சரணம்
மரங்கள் பூத்துக் குலுங்க
மந்திகள் தாவி ஓட
மழலைகள் மகிழ்ந்து ஆட
மனதெல்லாம் நிறைந்த முருகா (கு)