மார்கழி மாதம் 26 ஆம் நாள்

பிரம்மா

ஆதி கும்பேஸ்வரர் அருள் பெற
வில்வ அர்ச்சனை செய்த பிரம்மா
மதி மயக்கும் இசைத் தலைவி
சரஸ்வதி இசையில் மயங்கும் நாயகா பதியுடன் திரிபுர தாண்டவம்
கண்டபிரம்மா
சித்திர சபையில் ஓவியம் வடித்தவனே
நதிபோல் பாய்ந்து வளம் சேர்ப்பாய்
படைக்கும் பிரம்மா எங்களைக் காப்பாய்

விஷ்ணு

ஆலயிலை கண்ணா அமுதஉன்னு கண்ணா
அடியவரை காக்க பிறவியெடு கண்ணா காலநேரம் பார்க்காமல் காப்பவனே கண்ணா
கார்மேக கண்ணா புல்லாங்குழல் கண்ணா கோலமா பதிய நடப்பவனே கண்ணா
கோமாதா கூட இசைப்பவனே கண்ணா சாலம் செய்யும் மாயவனே கண்ணா
சங்கடம் போக்கி எங்களைக் காப்பாய்

சிவன்

உத்திராட்சை கொட்டை அணிந்த சிவனே
உன்னையே நினைத்து சிந்தனை செய்தால் எத்திசையிலும் இருக்கும் ஈசனே அருள்வாய்
எங்களைக் காப்பது உன்னருள் பிரசாதமே சித்திரை மாதவீதி உற்சவத்தில் வந்து
சித்தி தருவாய் பவனி வந்து
புத்தியில் நல்சிந்தனை தந்து சிவனே
புவியைக் காப்பாய் அருளைத் தந்து.

Share.

Leave A Reply