5-ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்
தந்தை குமாரசாமி தேசிகர் தவப்பயன்
தலையில் மட்டும் அறிவில்லாமல் உடல் முழுவதும் அறிவும் தெய்வீகமும்
பின்னிப்பிணைந்தவர் வெள்ளியம்பல சுவாமிகளை குருவாய் ஏற்றவர்
குருவை இகழ்ந்த புலவரிடம் போட்டியிட்டு
“யானைக்கண்” எனத்தொடங்கி
“கன்றனேஞ்சே”எனமுடித்து முப்பதுபாடல் பாடி மமகாரம் அடைக்கினார்
முருங்கை மரத்தில்முட்டிய தேரச்சு முறியச்செய்தார்.
மாங்கனிக்காக
மடிபிடித்தவன் வீழ்ந்து மடிந்தான்
வில்லியனூரில்
சிவதரிசனம் கண்டு நுணாமர
அடியில் தவம்செய்து முப்பத்தி இரண்டுவயதில்
முப்பத்தி இரண்டு நூல்கள் தந்து சமாதியானார்.