சம்போ !சுயம்போ !சுயம்போ!
நர்த்தன நாயகா! சதாசிவா! சம்போ !சுயம்போ !சுயம்போ!
மகாதேவா! ஈசா !நேசா !
நேசா!( சம்)

கையிலை மலையின் பனிநாதா !
சுயம்பு லிங்கா பனிலிங்கா! தைரியம் கொடுக்கும் சிவநேசா !
நர்த்தனம் ஆடும் ஈசா!சர்வேசா!
சர்வேசா (சம்)

சிவராத்திரி நேசா! அபிஷேகப் பிரியா !
நான்கு கால அபிஷேகப் பிரியா !
நவராத்திரி அம்பிகை நேசா! ஈசா !
நாட்டியம் ஆடும் நடராஜா! சக்திநேசா! சக்திநேசா! (சம்)

பனி லிங்கா! நந்தி நேசா !
ஏழு சுரங்களில் ஆடும் ஈசா! பனிப் புயலில் ! காட்சி தந்தாய்! ருத்ர தாண்டவம் ஆடிய நேசா!
(சம்)

Share.

Leave A Reply