பதினொன்றாவது அத்தியாயம்

விஸ்வரூப தரிசன யோகம்

அர்ச்சுனனுடைய வேண்டுகோளுக்கு இணங்க கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார். இந்த அத்தியாயத்தில் உள்ள விசயம் பெரும்பாலும் விஸ்வரூபத்தைப் பற்றியதாகும். விஸ்வரூபத்தை துதிப்பது பற்றியதாகவும் வருகிறது.ஆகவே,இந்த அத்தியாயத்திற்கு ‘விஸ்வரூப தரிசன யோகம்’ என்று பெயர்.

கேசவா! எனக்கு அருள் புரிவதற்காக உங்களால் மிக உயர்ந்ததும், மறைத்து காப்பாற்றத் தக்கதும் ஆன உபதேசம் கூறப்பட்ட பின் என்னுடைய அஞ்ஞானம் அழிந்தது.

கேசவா! என் மனதில் நன்றி உணர்ச்சி, மகிழ்ச்சி, அன்பு இவற்றின் அலைகள் எழுந்தன. அகிழ உலகங்களுக்கும் அதிபதியான பகவானே!

அற்பமான என்னிடம் எவ்வளவு கருணை வைத்துள்ளாய்! இந்த அர்ப்பனை உமது பக்தன் என்கிறாய், உன்னுடைய மகிமைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறாய்.

முழு நம்பிக்கையுடன், மறுபடியும் யோக சக்தியையும், விபூதிகளையும் எடுத்துச் சொல்லும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க.

கிருஷ்ணா! நீ வர்ணித்த விதம் எனது உள்ளத்தில் பகவத் கிருபையால் ஏற்பட்ட அடையாளம் பதிந்தது.

இதற்கு முன் உணராத வகையில் பகவானுடைய கிருபை தனக்கு ஏற்பட்டதை உணர்ந்து கொண்டு ஆனந்தத்தில் மெய் மறக்கிறேன்.

தன் சொந்த முயற்சி, சாதனை, தன்னுடைய தகுதி இவற்றின் நினைவு இருக்கும் வரை பகவத் கிருபை என்ற பரம லாபம் கிடைக்காமல் போகும்

பகவானுடைய கிருபையினால் அவன் தானாகவே சாதனையின் உயர்நிலையை அடைய முடிகிறது.

“நடப்பதெல்லாம் பகவானுடைய அருள்” என்று விளங்குகிறது. அப்போது, அவனுக்கு நன்றி உணர்வு பெறுகுகிறது.

அவன் பகவானைக் கூவியழைக்க விளைகிறான். பிரபுவே! நான் ஒரு தகுதியும் அற்றவன். முற்றிலும் உங்கள் கருணையைப் பெறத் தகுதியற்றவன். “இவை எல்லாம் உங்கள் அருளின் லீலையே” பிரபுவே! நீங்கள் உங்கள் பிரபாவம் பெருமை ஆகியவற்றைக் கூறினீர்கள் அவற்றை கேட்பதற்குரிய தகுதி எனக்கு இல்லை.

எனக்கு அருள் புரிய வேண்டும் என்று நீங்களாகவே கருதி, மிகவும் மறைத்துக் காப்பாற்ற வேண்டிய இந்த ரகசியங்களை எனக்கு கூறினீர்கள் என்கிறான் அர்ச்சுனன்.

Share.

Leave A Reply