கேசவா! மிகப் பெரும் துயரத்தால் கூட கலங்க மாட்டான் என்று கூறுவதன் பொருளை விவரிக்கள். என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! பரமாத்மாவை அடைந்து விட்ட யோகிக்கு மிகப்பெரும் போகங்களும், ஐஸ்வர்யங்களும், ரச மற்றவையாகவும், துச்சம் ஆனவையாகவும் தோற்றும்.

யோகி அவற்றை அடைய விரும்புவதில்லை. அவை கிடைத்தாலும், கைவிட்டுப் போனாலும் இலட்சியம் செய்வதில்லை. தன்னுடைய நிலையில் இருந்து கொஞ்சமும் கலங்க மாட்டான்.

அதே போல் மிகப்பெரிய தூக்கம் வந்தாலும் கலங்காமல் இருப்பான்.
தைரியமுடனும், சகிப்புத்தன்மை உள்ளவனாகவும் தாங்கிக் கொள்ள முடியும்.

இந்த நிலை அடைந்து விட்ட யோகியோ மிகவும் பயங்கரமான பொறுக்க முடியாத துக்கங்களிலும் தன்னுடைய நிலையில் முற்றிலும் உறுதியாக அசையாமல் நிற்பான் என உணர்த்துகிறார் கிருஷ்ணன்.

ஆயுதங்களைக் கொண்டு அவையங்களை வெட்டினாலும், பொறுக்க முடியாத குளிரோ, வெப்பமோ,நோயின் துன்பமானாலும், மிகவும் பிரியத்திற்கு பாத்திரமான மனிதரோ, பொருளோ தன்னை விட்டு பிரிந்து போனாலும்…

உலகியல் காரணமாக அவமானம், நிந்தை, புறக்கணிப்பு ஏற்பட்டாலும் இவை எல்லாமே சேர்ந்து வந்தாலும், எந்த நிலையிலும் அவன் கலங்குவது இல்லை.

இதற்கு காரணம், பரமாத்மாவின் நேரிடை அனுபவம் பெற்ற பிறகு உண்மையில் அந்த யோகிக்கு இவ்வுடலுடன் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை.

உலகத்தினர் மட்டும் அது அவனுடைய உடல் என்று நினைக்கிறார்கள். அவனுடைய உடல் புலன்கள் மனம் ஆகிய வற்றுக்கு உலகியல் பொருட்களுடன் ஒட்டுதலும், பிரிவும் ஏற்படலாம்.

எந்த நிலையிலும் விகாரம் இல்லாமல் பரமாத்மாவிடம் அசைக்க முடியாத நிலை இருந்து கொண்டே இருக்கும் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

துன்பமயமான சம்சாரச் சேர்க்கையில் இருந்து விடுபடுவதும், யோகம் என்பதை அறிய வேண்டும். சோர்வற்ற தைரியமும், உற்சாகமும் உள்ள சித்தத்தோடு உறுதியாக ஆற்றப்பட வேண்டும் என்ற

சங்கல்பத்தினால் உண்டாக் கூடிய எல்லா விருப்பங்களையும் மீதமின்றித் துறந்து விட வேண்டும். மனதினால் புலன்களின் கூட்டத்தை எல்லாப் புறங்களில் இருந்தும் நன்கு அடக்க வேண்டும்.

படிப்படியாகப் பயின்று மனதை உலகியலில் இருந்து ஒதுங்கச் செய்ய வேண்டும். உறுதி பூண்ட புத்தியினால் மனதை பரமாத்மாவிடம் நிலைபெறச் செய்து பரமாத்மாவைத் தவிர வேறு எதையும் நினையா திருக்க வேண்டும்.

இந்த நிலையில்லாது அலைந்து கொண்டே மனம் இருந்தால், எதன் காரணமாக உலகில் அலைகிறதோ அந்தந்த விசயங்களில் இருந்து தடுத்து நிறுத்தி திரும்பத் திரும்ப  பரமாத்மாவிடமே நிலைபெறச் செய்ய வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply