கேசவா! மறுபிறவி என்பதையும். அது துயரத்தின் உறைவிடம். அழியக் கூடியது என்பதையும் பற்றி விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன் .  

அர்ச்சுனா! உயிர் பரமாத்மாவை அடையாத வரை கருமத்திற்கு ஆட்பட்டு ஒரு பிறவியை விட்டு மறு பிறவி எடுப்பது என்பது தவிர்க்க முடியாதது.

மரணத்திற்குப் பிறகு கர்மங்களுக்கு கட்டுப்பட்டு தேவர்கள், மனிதர்கள், பசு, பறவை, விலங்கு இப்படி ஏதோ ஒன்றில் பிறப்பு எடுப்பதை மறுபிறவியாகும்.

அது எந்த பிறவியாக இருந்தாலும் துக்க மயம் தான். அழியக்கூடியதுதான், பற்று காரணமாக பல வித பாவங்கள் செய்ய நேர்கின்றது அதன் விளைவாக துன்பமும், நரகத்தின் வேதனைகளும் வந்தடைகின்றன.

இறப்பு வரை துக்கத்தின் மேல் துக்கம் தான் தொடர்கிறது. மரபிறவியே துக்கத்தில் தாயகம் தான். எந்தப் பிறவியில் எது கிடைத்தாலும் அது நிலைப்பது இல்லை. அது நிலையற்றது என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! மகாத்மா மக்களுக்கு ஏன் மறுபிறவி கிடையாது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! எல்லா சுகங்களும், நிறைந்து விளங்கும் எல்லை அற்ற கடல் ஆனவரும், எல்லாவற்றிற்கும் ஆதராமானவரும் மிகச் சிறந்த புகலான வரும் ஆன…

பரமாத்மா ஆனவரும், பரம புருஷன் ஆனவருமான பகவான் ஒரு முறை எவருக்கு கிடைத்து விடுகிறாரோ, அவருக்கு மறுபடியும் எந்த நிலையிலும் பகவானுடைய பிரிவு ஏற்படாது. பகவானை அடைந்த பிறகு உலகில் பிறவி எடுக்க நேரிடாது என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! சொர்க்க, நரகமான உலகங்கள் அழியும் தன்மை உடையது. எந்த உலகத்தை அடைந்தாலும் திரும்பவும் உலகில் பிறக்க நேரிடும்.

ஆனால், என்னை அடைந்த பின்னர் மறுபிறவி கிடையாது. ஏனென்றால் நானே காலத்தை கடந்தவன் எனக் கூறுகிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ அது ஓராயிரம் சதுர்யுகங்களைக் கால வரையறையாகக் கொண்டது. அவ்வாறே இரவும் ஓராயிரம் சதுர்யுகங்களை முடிவாகக் கொண்டது. என்பதை யார் தத்துவ ரீதியாக அறிகிறார்களோ, அந்த யோகியர் பகல், இரவு என்ற காலத்தின் தத்துவத்தை அறிந்தவர்கள் என்கிறார் கிருஷ்ணன்.  

Share.

Leave A Reply