“உங்கள் கிருபையினால் நான் செய்ய வேண்டியதைச் செய்தவன் ஆனேன். நான் செய்ய வேண்டிய கடமையில் மீதம் ஒன்றும் இல்லை. உங்கள் சொற்படி உலகத்திற்கு வழிகாட்டும் முறையில் வெறும் நிமித்தமாக இருந்து நீங்கள் எப்படிச் செய்வீக்கிறீர்களோ, அவ்வண்ணமே விளையாட்டாகச் செய்து முடிப்பேன்” என்கிறான் அர்ச்சுனன்.

பகவான் ஸ்ரீ வாசுதேவருக்கும், மகாத்மாவான அர்ச்சுனனுக்கும் இடையே நிகழ்ந்த இந்த அற்புதமான உட்பொருள் கொண்ட புல்லரிக்கக் கூடிய உரையாடலைக் கேட்டேன் என்கிறார் சஞ்சயன்.

மகாத்மாவான அர்ச்சுனன் கேட்க சாட்சாத் பரமாத்மா திருவாய் மலர்ந்தருளிய இந்த உபதேசம் மிகவும் அற்புதமானது, ஆச்சரியமானது, தனிச்சிறப்புடையது.

இதன் மூலம் மனிதன் பகவானுடைய தெய்வீகமான உலகியலுக்கு அப்பாற்பட்ட குணங்கள், பிரபாவங்கள், ஆளுமையுடன் கூடிய முழு விஸ்வரூபத்தின் முழுமையான ஞானம் கிடைக்கப் பெறுகிறான்.

மனிதன் இதை எவ்வளவு நுட்பமாகக் கேட்கிறானோ, அறிகிறானோ, அதற்கு ஏற்ப மகிழ்ச்சியும், ஆச்சரியமும் பெற்று மெய் சிலிர்ப்பு அடைகிறான். உடல் முழுவதும் புல்லரிக்கிறது என்று அர்ச்சுனன் கூறிய…

“அற்புதமான, ஆச்சரியமான உரையாடலை நேரிடையாகக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்ற என் பேற்றை என்னென்று சொல்வேன்” என்று விம்மிதம் அடைகிறான் சஞ்சயன்.

ஸ்ரீ வியாச பகவானுடைய அருளினால் தெய்வீகப் பார்வை பெற்ற நான் உயர்ந்த ரகசியமான இந்த யோகத்தை அர்ச்சுனனைக் குறித்துச் சொல்லுகின்ற சாட்சாத் யோகேஸ்வரனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் இருந்து நேரடியாக கேட்டேன் என்கிறார் சஞ்சயன்.

அதாவது, பகவான் வியாசர் கிருபையினால் எனக்கு தெய்வீகப் பார்வை வழங்கினார். வெகுதூரத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கிட்ட நின்று பார்ப்பது போல் காண வைத்தார்.

அங்கு நடந்த தெய்வீகமான இந்த உரையாடலைக் கேட்க வைத்து, அதை அறிந்து கொள்ளும் அறிவாற்றலையும் வழங்கினார்.

அதன் காரணமாகத்தான் நான் பகவானின் தெய்வீக உபதேசத்தை நேரடியாக கேட்கும் பேரு பெற்றேன். இல்லாவிட்டால் எனக்கு இந்த வாய்ப்பு எப்படிக் கிட்டும் என வியாசருக்கு தன் நன்றியைத் தெரிவிக்கிறார் சஞ்சயன்.

Share.

Leave A Reply