கேசவா! “நம்பிக்கையுடன் குறை காணாதவனாக இந்த கீதா சாஸ்திரத்தைக் கேட்பது” என்றால் அதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! பகவான் ஒருவர் இருக்கிறார். அவர் குணங்களில் நம்பிக்கை கொண்டு கீதா சாஸ்திரம் பகவனுடைய திருவாய் மொழியே சொல்லப்பட்ட உண்மை.

என்ற உறுதியும், நம்பிக்கையும், பிரியமும், விருப்பமும் கொண்டு கீதையின் மூல பாராயணத்தையோ, பொருள் விளக்கத்தையோ கேட்பதுதான் சிரத்தையுடன் கீதா சாஸ்திரத்தைக் கேட்பதாகும்.

இதைக் கேட்கும்போது, பகவானிடமோ, பகவானுடைய சொற்களிலோ எவ்வித குற்றம் குறை காணாமல். கீதையை எவ்விதத்திலும் அவமதிக்காமலும், குற்றம் காணும் நோக்கம் இல்லாமல் இதைக் கேட்க வேண்டும் என்கிறார்.

சிரத்தையோடு கீதா சாஸ்திரத்தைக் காதால் கேட்பவன் கூடப் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றால், கீதா சாஸ்திரத்தைப் பிறருக்குக் கற்பிப்பவர், பாராயணம் செய்பவர் பற்றிச் சொல்லவும் வேண்டுமா!

எனவே, பிறருக்குக் கற்பிக்கவோ, தானாகவோ கற்றுக் கொள்ள முடியாத வரும் கூட இதை அவசியம் கேட்கவாவது செய்ய வேண்டும். அவ்வாறு கேட்பதன் மூலம் பாவங்களில் இருந்து விடுபட்டு புண்ணிய உலகங்களை அடையலாம் என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! இந்த கீதா சாஸ்திரம் உன்னால் ஒன்றுபட்ட மனதோடு கேட்கப்பட்டதா? என்று கேட்கிறார் பின் அஞ்ஞானத்தினால் உண்டான உன் மோகம் அழிந்து விட்டதா? என கேட்கிறார்.

அதாவது “என்னுடைய
உபதேசம் கிடைத்தது மிக
அரிது. நான் ஒவ்வொரு மனிதனிடமும் நான் தான் பரமாத்மா என்னைச் சரணடைவாயாக” என்றெல்லாம் சொல்லிக்
கொண்டு இருக்க மாட்டேன்.

“நான் கூறிய தெல்லாம் நீ உன்னிப்பாகக் கேட்டு அறிந்து கொண்டாய் அல்லவா! கவனக் குறைவாக இருந்து இருந்தாய் ஆனால் நீ
மிகப்பெரிய தவறு செய்தவனாவாய்” என்று உணர்த்துகிறார்.

Share.

Leave A Reply