கிருஷ்ணா! பிராமணன், சத்ரியன், வைசியன் இவர்களுடைய மற்றும் நான்காம்  வர்ணத்தவருக்கும் கர்மங்கள்  பிரிக்கப் பட்டிருக்கின்றன என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! முதல் மூவரும் இரு பிறப்பாளர்கள். மூவருக்கும் பூணூல் உண்டு. வேதம் கற்கவும், வேள்வி முதலிய கர்மங்களைச் செய்யவும் தகுதி உண்டு. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கூறினார்.

நான்காம் வர்ணத்தவர் இரு பிறப்பாளர் அல்லர். அவர்கள் பூணூல் தரிக்க வேண்டும் என்றோ, வேதங்களைக் கற்க வேண்டும் என்றோ நியதி இல்லை.

வேள்வி முதலான வைதீக தர்மங்களில் அவர்களது பங்கு குறிப்பிடப் படவில்லை. ஆகவே, அவர்களைப் பிரித்துக் கூறுகிறார்.

உள்ளத்தை தன் வசப்படுத்திக் கலங்காமல் அமைதியாக வைத்துக் கொள்வதும், உலகியல் போகங்களின் சிந்தனைகளைத் துறப்பதும் மனவடக்கம் எனப்படும்.

எல்லாப் புலன்களையும் தன் வசப்படுத்தி, வெளிப்பொருட்களில் நாட்டம் கொள்ளாமல் தடுத்துப் பரமாத்மாவை அடைவதற்கான உபாயங்களில் முனைவது தமம் எனப்படும்.

சுயதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுப்பது அகிம்சை. சிறந்த விரதங்களைக் கைக்கொள்வது, போகப் பொருட்களைத் துறந்து எளிமையாக இருப்பது, ஏகாதேசி முதலிய உபவாசங்களை ஏற்பது, தனித்துக் காட்டில் வாழ்வது இவை எல்லாம் தவம் ஆகும்.
 
மனம், உடல், புலன்களையும் அவற்றின் செயல்களையும் தூயனவாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்தவிதமான மாசும் நேராமல் பார்த்துக் கொள்வது கவசம் எனப்படும்.

பிறரால் இழைக்கப்படும் தவறுகளைப் பொறுத்துக் கொள்வது சாந்தி எனப்படும்.

மனம் எந்தத் தீய பிடிவாதமும் கொள்ளாமல் மனம் போல புலன்களும் இயங்க வேண்டும். நேர்மை அற்ற இயக்கங்களும் வளரக்கூடாது. இவையே நேர்மை எனப்படும்.

வேதம், சாஸ்திரம், கடவுள், பரலோகம் இவை உண்மையானவை என்ற நம்பிக்கை கொள்ளுதல், பெரியோர்களுடைய சொற்களை மதித்தல் ஆஸ்தியம் எனப்படும்.

மேலே சொன்ன கருமங்களை செய்வதில் சிறிதும் துன்பப்படாமல் கடமை ஆற்றுபவன் பகவானை அடையும் மார்க்கம் தெரிந்தவன்.

Share.

Leave A Reply