சாஸ்திரங்களில் சுயதர்மம் என்று விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றும் போது எவ்வளவு பெரிய இடையூறுகள் நேர்ந்தாலும், அச்செயல்களைக் கைவிடாது முயற்சியுடன் உறுதியோடு செய்வதாகும்.

அப்படிக் கர்மங்களைச் செய்யும் போது அதை சரிவர நிறை வேறா விட்டாலும் கூட எனக்குப் பயனை அடைய விருப்பம் இல்லை. நான்  எதற்காகக் கர்மம் செய்ய வேண்டும் என்று அலட்சியம் செய்யாது சிரத்தையுடன் செய்ய வேண்டும்.

அதாவது, செயலில் பயனை அடைந்தவனுக்கு ஒப்பாகவும், பயனை எதிர்பார்த்துச் செயல் ஆற்றுபவனைப் போன்றும் சிறப்புடன் செய்ய வேண்டும்.

உற்சாகமாக இருப்பவன் எவ்வளவு பெரிய இடையூறுகள் நேர்ந்தாலும் தன் கடமையில் இருந்து வழுவ மாட்டான்.

மேலும், மிகுந்த ஊக்கத்துடன் எல்லா இடையூறுகளையும் கடந்து தனது கடமைகளை விடாப் பிடியாக உறுதியுடன் ஆற்றவன் இது தான் அவனுடைய இலக்கணம்.

சாதாரண மனிதன் தன் விருப்பம் நிறைவேறுவதற்கு ஒரு சாதனம் என்ற ஒரு கர்மத்தில் பற்றுக் கொண்டு அதைச் செய்து முடித்தால் அதில் அவனுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

ஏதாவது, இடையூறு ஏற்பட்டு அச்செயல் நிறைவேறாமல் தடைப் பட்டால் அவனுக்கு மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது.

அகங்காரம், மமகாரம், பற்று பயனில் கருத்து இவை இல்லாதவன் கர்மம் நிறைவேறினாலும் மகிழ்ச்சி அடைவதில்லை.

இடையூறினால் தடைபட்டாலும் வருத்தம் அடையாமல் இரு வேறு  சூழ்நிலைகளிலும் சமமாக ஒரே மாதிரியாக இருப்பான். சமமான மனப்பாங்கு உடையவனை ‘சித்தி’ ‘அசத்தி’களில் மாறுபட்டவன் என்கிறார்.

சாத்விக மனப்பாங்கு பரமாத்மாவைப் பற்றிய தத்துவ ஞானத்தைத் தெளிவு படுத்தும். முக்தியை விரும்புபவன் சாத்விக கர்த்தாவாக ஆக வேண்டும் என்கிறார்.

பற்றுடன் கூடியவன், செயலில் பயனை விரும்புபவன், பேராசை உள்ளவன், பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டவன். தூய்மை அற்ற நடத்தை உள்ளவன்.

மகிழ்ச்சியாலும், துயரத்தாலும் பாதிக்கப்படுபவன் இத்தகைய கடமை உடையவன் ராஜசன் எனப்படுகிறான். 

அதாவது, இவ்வுலக, பரலோக போகங்களிலும், மனைவி, மக்கள், வீடு, செல்வம், உறவு,மரியாதை, புகழ் முதலியவற்றிலும் பற்று உடையவன்.

நியாயமான செலவுகள் செய்வதற்கு தயங்குபவன். நியாயம், அநியாயம் தெரியாமல் சேர்ப்பதில் பேராசை பிடித்தவன்.

எந்த விதத்திலாவது பிறருக்குத் துன்பம் செய்வதே இயல்பாக உடையவன். தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக விருப்பு, வெறுப்புடன் செயல்
புரிவான்.

அதனால், பிறகு ஏற்படும் கஷ்டத்தை சிறிதும் அறியாதவன் தன் சுகம் தன் போகம் இவற்றிற்காக பிறருக்கு துன்பம் அளிப்பவன்.

உடல் தூய்மை, நன்னடத்தை அற்றவன், நீர், மண் இவை கொண்டு உடலையும், உடைகளையும் தூய்மைப்படுத்திக் கொள்ளாதவன்.

சம்சார சக்கரத்திலிருந்து விடுபட மாட்டான். எனவே, முக்தியை விரும்புபவன். ராஜச கடமை உள்ளவனாக இருக்கக் கூடாது என்கிறார். 

Share.

Leave A Reply