வெளிப்படையாகப் புலன்களை அடக்கி விட்டு மனதில் போகங்களை நினைத்திருப்பவன் தியாகி அல்லன். அகங்காரம், மமகாரம், பற்று இவற்றை விடாமல் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வேள்வி, தானம், தவம், கடமைகள் இவற்றை முற்றிலும் செய்யாமல் விடுபவனும் தியாகி அல்லன் என்கிறார்.
கர்மத்தின் பயனைத் துறக்காத மனிதர்களுக்குக் கர்மத்தின் உடைய நல்லதும், தீயதும், இரண்டும் கலந்ததுமான மூன்று விதமான பயன் இறந்தபின் கட்டாயமாகக் கிடைக்கின்றது.
ஆனால், கர்ம பயனைத் துறந்த மனிதர்களுக்குக் கர்மங்களுடைய பயன் ஒருபோதும் ஏற்படாது. அவை வறுக்கப்பட்ட விதைகள் போல திறனற்றவை யாகும்.
அர்ச்சுனா! எல்லாக் கர்மங்களும் நிறைவேறுவதற்கு இந்த ஐந்து காரணங்கள் கர்மங்களின் முடிவிற்கான உபாயத்தை சாங்கிய சாஸ்திரத்தில் கூறப்பட்டன.
அந்த ஐந்து காரணங்களும் ஒன்று சேர்வதால் தான் எல்லாக் கர்மங்களும் நிறைவேறுகின்றன. அவற்றை உனக்கு கூறுகிறேன். நீ கவனமாகக் கேட்டுத் தெரிந்து கொள் என்கிறார் கிருஷ்ணன்.
மனம், புத்தி, அகங்காரம் முதலியவை உடலில் உள்ளே உள்ள காரணங்கள்.
ஐந்து அறிவுப் புலன்களும், ஐந்து செயல் புலன்களும் ஆகப் பத்தும் புறக்காரணங்கள்.
இவை தவிர யாகம் முதலிய கர்மங்களுக்குத் தேவையான கருவிகளும் காரணங்களில் அடங்கும்.
நல்லதும், தீயதுமான முன்வினைப் பயன்களில் பதிவுகளை இங்கே ‘தெய்வம்’ எனக் குறிப்பிடுகிறார்.
மனிதன் மனம், வாக்கு, உடலினால் சாஸ்திரங்களுக்கு இசைந்த வாறோ அல்லது அதற்கு முரணாகவோ எந்தச் செயலை செய்தாலும் ஐந்தும் காரணங்கள் என்கிறார்.
புண்ணிய, பாவச் செயல்கள் அனைத்தும், அவற்றின் பயன்களை இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனுபவிக்க வேண்டி இருக்கும். இந்த ஐந்து சேராமல் எச்செயலும், காரியமும் நடைபெறாது.
ஆனால், இங்ஙனம் இருக்க. எந்த மனிதன் புத்தியில் தூய்மை இல்லாமையினால் கர்மங்களைச் செய்வதில் தூயதான ஆத்மாவையே செய்பவனாகக் காண்கிறானோ, அந்த தூய்மையற்ற புத்தியுடைய அஞ்ஞானி உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை என்கிறார்.
அதாவது, எல்லாக் கர்மங்களும் நடப்பதற்கு முன் சொன்ன உடல் முதலில் ஐந்து தான் காரணம்.
ஆத்மாவுக்கு அந்தக் கர்மங்களில் சம்பந்தமில்லை. ஆகவே, ஆத்மாவை ‘கடவுள்’ என்பது எவ்விதத்திலும் சரியல்ல. உண்மை இவ்விதம் இருக்க உலகத்தினர் அறியாமையினால் தம்மை கர்த்தரா என்று நினைப்பது வியப்பான விசயம் என்கிறார்.