மேலும், விவரிக்கிறார். பிறர் மனம் புண்படாமல் கோள் சொல்லுதல், கடு கடுப்பாக பேசாமல், கடுமையாக குத்திக் காட்டாமல், அலட்சியப்படுத்தாமல், அவமதிப்பு முதலிய குறைகள் இன்றி எவ்விதத்திலும் அன்பாகவும், இனிமையாகவும், நேர்மையாகவும்,அமைதியாகவும் அமையும் சொல் பிரியம் ஆகும்.
இம்சை, பொறாமை, பகை கொள்ளாமல் இவற்றிற்கு அடிபணியாமல், அன்பு, கனிவு, மங்கலம் ஆகியன நிறைந்ததுமான சொல் இதம் ஆகும்.
மனதைப் புண்படுத்தாத சாத்தியமான பிரியமான, இதமான சொற்களும், சாஸ்திரங்களில் கூறப்பட்ட மாசற்ற பேச்சும் சொல்வழித் தவம் ஆகும்.
மேற்குறித்த செயல்களுடன் அவர் அவருக்கு இயன்றவாறு வேதங்கள், மந்திரங்கள், புராணங்கள், கீர்த்தனைகள் பாடுவது, சொல்வது அனைத்தும் வாக்குடன் தொடர்பு கொண்டவை.
வாக்கின் மாசுகளை நீக்கி, மனதையும், பேச்சையும், புனிதமாக்கும் தன்மை வாக்கினால் செய்யக்கூடிய தவம் எனப்படும் என்கிறார் கிருஷ்ணன்.
மனமகிழ்ச்சி, அமைதியான இயல்பு, பகவானை இடைவிடாது சிந்தித்து இருக்கின்ற இயல்பு, மனவடக்கம், உள்ளத் தூய்மை இவை எல்லாம் மனதால் ஆற்றக்கூடிய தவம் எனப்படும்.
மனதின் சஞ்சலத்தை அறவே ஒழித்து, அதை நிலையாக நன்கு தன்னுடைய வசத்தில் வைத்துக் கொள்வதே மனவடக்கம் ஆகும்.
பகை, அருவருப்பு, அலட்சியம், பொறாமை, சகிப்புத்தன்மை இன்மை, பதற்றம், வீணான கவலை, விரோதம் இவற்றை ஒழித்து தீங்கு நினையாமை, நேர்மையான தயவு, பொறுமை, அன்பு,பணிவு முதலிய அனைத்து நற்பண்புகளும் என்றும் மலர்ந்து இருப்பது உள்ளத் தூய்மை ஆகும்.
மனதில் உள்ள எல்லா மாசுகளையும் நீக்கி பரிசுத்தமாக்குபவை மனதால் ஆற்றக் கூடிய தவமாகும் என்கிறார்.
பயனில் கருத்து இல்லாத யோகிகளால் மிகுந்த சிரத்தையுடன் செய்யப்படுகின்ற மனம், மொழி, மெய் இவற்றால் ஆற்றப்படுகின்ற மூன்று விதமான தவம் சாத்விகமானது.
எந்த தவம் பாராட்டுதலையும் பெருமையையும், போற்றுதலையும், குறிக்கோளாகக் கொண்டு தன்னலம் கருதி ஆடம்பரத்திற்காக செய்யப்படுகின்ற பயன் தருமா, தராதா என்பது நிச்சயம் இல்லாதது, அழியக்கூடியது, உறுதியற்றது இத்தவம் ராஜச மாகும்.
எந்த தவம் முரட்டு பிடிவாதத்தினால் மனம், மொழி,மெய்களுக்குத் துன்பம் இழைப்பதற்காகவும், பிறருக்குத் தீங்கு இழைப்பதற்காகவும் செய்யப்படும் தவம் தாமசமாகும் .