கேசவா! சாஸ்திர விதிமுறைகளை எவர்கள் மீறி சிரத்தையால் உந்தப் பட்டு தெய்வங்களை வழிபடுகிறவர்கள் நிலையைக் கூறுங்கள். சத்வ குணமும், ராஜச குணமும், இல்லாத தாமச குணம் உடையவர் நிலையையும் விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! முன்பு சாஸ்திர விதிமுறைகளை அலட்சியம் செய்து முறை மீறுவது பற்றிக் கூறினேன். இப்போது சாஸ்திர முறைகளை அறியாத காரணத்தால் முறை மீறுவது பற்றிக் கூறுகிறேன். இதுவே, இவற்றுக்கு உள்ள வேறுபாடு ஆகும்.
அதாவது, போதிய நேரமின்மையால் பாடுபட முடியாததால், சாஸ்திர பயிற்சியின் குறைபாட்டினால் சாஸ்திர முறைகளில் முழுமையான ஞானம் இல்லை. இந்த அறியாமை காரணத்தினால் சாஸ்திர முறைகளை விட்டு விடுகிறார்கள்.
தான் தோன்றித் தனமாகத் தனக்கு நல்லது என்று தோன்றுவதை செய்கிறான். இவனுக்கு சிரத்தை இருக்கிறது. ஈடுபாடு இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்க முடியாது என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! உலகில் ஐந்து விதமான மனிதர்கள் உள்ளனர்.
1-சாஸ்திர முறைகளை கடைபிடிப்பவர்கள் சிரத்தை உடையவர்கள்.
2-சாஸ்திர முறைகளை ஓரளவு கடைப்பிடிப்பவர்கள் சிரத்தை இல்லாதவர்கள்.
3-சிரத்தை உண்டு. ஆனால், சாஸ்திரம் முறைகளைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள்.
4-சாஸ்திர முறைகளைக் கடைபிடிக்காமல், சிரத்தையும் இல்லாமல் இருப்பவர்கள்.
5-சாஸ்திரங்களை அலட்சியம் செய்து சாஸ்திர முறைகளை மீறுபவர்கள் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! மனிதர்களுக்கு அறநெறி முறையின்றி இயல்பாக உண்டான சிரத்தை தத்வ குணமுடையது, ராஜச குணமுடையது, தாமச குணம் உடையது என்று மூன்று விதமான சிரத்தை இருக்கிறது அவற்றை என்னிடம் நீ கேள் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! உடல் பற்று உடையவர்கள் சாதாரண மனிதர்கள் அவர்கள் சாஸ்திர முறையை கற்காமல் யாகம், பூசை முதலியன செய்வதன் மூலம், அவர்களின் சிரத்தையை குறிக்கிறது. ஞானத்தால் ஏற்பட்டது அல்ல இயல்பாக வருவது.
சாஸ்திரங்களைக் கற்பதாலும், கேட்பதாலும் வருவது சாஸ்திர முறைப்படி வருவதாகும்.
இதுவரை செய்யப்பட்ட கர்மங்களின் மனப்பதிவினால், சம்சார பந்தத்தினால் ஏற்பட்ட இயல்பான சிரத்தை என மூன்று விதமாகத்தான் சிரத்தை இருக்கிறது என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! மனிதர்களுக்கு சிரத்தை அவர்களுடைய மனப்பாங்குக்கு ஏற்றவாறு அமைகிறது. மனிதன் சிரத்தை உருவானவன் யாருக்கு எந்த நிலையோ அதில் சிரத்தை உள்ளவனாக இருப்பான்.
தத்வகுணம் நிறைந்த மனிதர்கள் தேவர்களை வழிபடுகிறார்கள். ராஜச குணம் உடையவர்கள் குபேரன்,ராகு, கேது இவர்களை வழிபடுகிறார்கள். தாமச குணம் உடையவர்கள் பூத, பிரேத, பிசாசுகளை வழிபடுகிறார்கள்.