இப்பயனாக தூய்மையற்ற பாழ் நரகத்தில் வீழ்கிறார்கள். அதாவது, மலம், சிறுநீர், இரத்தம், கொழுப்பு முதலிய நாற்றம் உடைய பொருட்கள் நிறைந்ததும்…

துன்பம் தருவதுமான பயங்கர நரகத்தில் வீழ்வார். இவ்வாறு அசுர இயல்பு  உடையவர்களுக்கு ஏற்படும் இழிந்த நிலையை கூறுகிறார்கள் கிருஷ்ணன்.

தன்னைத் தானே உயர்ந்தவனாக நினைத்துக் கொள்பவர்களும், கர்வம் உடையவர்களும், செல்வம், தற்பெருமை, செருக்கு உடையவர்களும் பெயர் அளவில் யாகம் என்ற செயல்களால் ஆடம்பரமாக சாஸ்திர விதிகளை மீறி யாகம் செய்கிறார்கள்.

அகங்காரத்தையும், உடல் வலிமையையும் கர்வத்தையும், கோபம் முதலியவற்றையும் கைக்கொண்டு பிறரை இகழ்கின்றவர்களாகத் தம் உடலிலும், பிற உடலிலும் இருக்கும் இறைவனை மறந்து தாமே எல்லாம் என்று கர்வப்படுகிறார்கள்.

பிறரிடம் குற்றம் குறை காண்பது. குறை கண்ட பின் அவர்களை நிந்திப்பது. அவர்களுடைய நற்பண்புகளைக் குறைத்துப் பேசுவது.

நற்பண்புகளைக் குற்றமாக எடுத்துச் சொல்வது ஆகியன எல்லாம் அசுர குணமாகும். இவர்கள் சாதாரண மனிதர்களை மட்டும் அல்ல, பகவானையும், சாதுக்களையும், கூட குற்றம் சாட்டுவார்கள்.

மேலும், பிறரிடம் பகைமை பாராட்டி அவர்களுக்குப் பல விதங்களிலும் தீங்கிழைப்பார்கள். தாமும் கஷ்டப்படுவார்கள், என்னை வெறுப்பவர்களாக இருப்பார்கள் என்கிறார் கிருஷ்ணன்.

என்னை வெறுப்பவர்களும், பாவம் செய்பவர்களும், கொடியவர்களும் ஆன மனிதர்களில் கடையவர்களுமான அவர்களை நான்!

உலகியல் சுழல்களில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அசுரப் பிறவிகளிலேயே தள்ளி விடுகிறேன். அதனால், அவர்கள் மனிதப்பிறவி கிடைக்காமல் விலங்கு, பறவை,புழு, பூச்சிகளாகப் பிறந்து உழல்வார்கள் என்கிறார்.

அர்ச்சுனா! இந்த அறிவிலிகள் என்னை அடையாமலேயே ஒவ்வொரு பிறவியிலும் அசுர இயல்புள்ள பிறவியை அடைகிறார்கள், மேலும், அதைக் காட்டிலும் மிகத் தாழ்ந்த நிலையை அடைந்து கோரமான நரகத்தை அடைகிறார்கள் என்கிறார்.

அதாவது, மனிதப் பிறவி பெற்ற உயிருக்கு மட்டுமே பகவானே அடையும் தகுதி உண்டு. அத்தகுதியைப் பெற்றும் இதை மறந்த தெய்வீக வழியை விடுத்து அசுரப் பண்புகளை கடைப்பிடிப்பவன் மனிதப் பிறவியை பாழாக்கி கொள்கிறான்.

‘மனிதப் பிறவி பெற்றும். அசுரப் பண்புகளை வளர்த்து வாழ்க்கையின் இலட்சத்தை அடையாமல் பாழடித்துக் கொள்ளாதே’ என எச்சரிக்கிறார் கிருஷ்ணன்.

காமம், கோபம், பேராசை இம்மூன்று வகையான நரகத்தில் நுழைவாயில் ஆத்மாவை நாசம் செய்யக் கூடியது. மனிதனை இழிந்த நிலையில் தள்ளக்கூடியது. ஆகவே, இம்மூன்றையும் விட்டுவிட வேண்டும் என்கிறார்.

Share.

Leave A Reply