கேசவா! பகவானின் திவ்யதரிசன நிலையை காண்பதற்கு ஆரம்பத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும். முடிவான நிலை எவ்விதம் இருக்கும் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சனன்.

அர்ச்சனா! முதலில் பகவான் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். பின் தனக்குப் பிடித்த தெய்வமாக வழிபட வேண்டும்.

முன்னே வைத்து பூஜைகள் செய்து நெய்வேத்தியங்கள் செய்ய வேண்டும். எதிரிலேயே வந்து ஏற்றுக் கொள்வார் என்பதை உணர வேண்டும்.

பகவானின் அருளால் நேரிடை தரிசனம் கிடைக்கும் எப்பொழுது கிடைக்கும் என்று காலவரை விதிக்க முடியாது. எந்த நிலையிலும் எந்தப் பொருளிலும் தரிசனம் கிடைக்கும் பிறகு சாதகனுடைய நிலை என்ன என்பதை
பகவானுடைய தரிசனம் பெற்ற நிலையை அவரே அன்றி பிறர் அறிய முடியாது.

கண்களை திறந்த நிலையிலும் மூடிய நிலைகளும், எந்தப் பொருளிலும் பகவானை காணும் பயிற்சியை மேற்கொண்டால் மனிதன் முதல் பறவை, விலங்கு, இலை என அனைத்திலும் இறைவனைக் காண முடியும் என விவரிக்கிறார்.

எவன் ஒன்றிய நிலையில் நிலைபெற்று அனைத்துச் சராசரங்களிலும் ஆத்மாவாக விளங்கும் வாசுதேவனான  என்னை வழிபடுகிறானோ, அந்த யோகி எவ்வகையில் செயல்பட்டுக் கொண்டு இருந்தாலும் என்னைத் தவிர வேறொன்றும் இல்லவே இல்லை என்கிறான் கிருஷ்ணன்.

கேசவா! எவ்விதத்தில் அவன் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் என்னிடமே செயல்பட்டுக் கொண்டிருப்பான் என்பதற்கு அவன் நற்செயல்களோ, தீய செயல்களோ, புண்ணியமோ, பாவமோ எது செய்தாலும் பகவான் இருப்பான் என்று பொருள் கூறலாமா என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா!இப்படி பதில் கொள்ளக்கூடாது பகவானே அடைந்து விட்ட மகாத்மாக்கள் பாவம் செய்வார்கள் என்பது ஒருபோதும் நடைபெறாது.

எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பெரும் பாவமான  காமம் தான் இந்த காமம் பற்றுதலில் பிறக்கிறது.

பரமாத்மா தரிசனம் பெற்றுவிட்டால் பற்றுதல் அறவே அற்றுப் போய்விடும். இந்த நிலையில் பகவானை அடைந்து விட்டவன் மூலமாக தடை செய்யப்பட்ட பாவச் செயல்கள் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

இது தவிர உயர்ந்த மனிதன் எப்படி நடந்து கொள்வானோ, மற்றவர்களும் அதையே பின்பற்றுவார்கள்.

இயல்பாகவே ஞானியிடம் இந்தப் பொறுப்பு வந்தமைவதால் அவர்கள் பாவச் செயல்கள் புரிவது நடக்கக் கூடியதன்று என்று கூறுகிறார்கள் கிருஷ்ணன்.

அர்ச்சனா! எந்த யோகி எல்லா சராசரங்களையும் தன்னைப் போலவே சமநோக்கில் பார்ப்பவனும் எல்லோருடைய சுகங்களையும், துக்கங்களையும் தன்னுடையது போன்று சமமாகப் பார்க்கிறானோ அந்த யோகி உயர்ந்தவனாக மதிக்கப்படுகிறான் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply