பதினாறாவது அத்தியாயம்

தெய்வ சம்மந்த உபாய யோகம்.

இந்தப் பதினாறாவது அத்தியாயத்தில் தெய்வம் என்ற சொல்லுக்கு உரியவரான பரமேஸ்வரனை அடைவதற்கான நற்பண்புகளும் நன்னடைத்துகளும் விளக்கப்படுகின்றன.

அவற்றைக் கடைப்பிடித்தல் தெய்வ சம்பத் என்று கூறப்படுகிறது. தீய குணங்களும், தீய நடத்தைகளும் அசுரர்களுடையவை என்று அறிந்த அவற்றைக் களைய வேண்டும் என்பதற்காக அவற்றை ’அசுர சம்பத்’ என்று பிரித்துக் காட்டி விரிவாக விளக்குகிறார். ஆகவே, இந்த அத்தியாயத்திற்கு “தெய்வ சம்பந்த உபாய யோகம்” என்று அழைக்கப்படுகிறது.

அர்ச்சுனா! முற்றிலும் அச்சம் நீங்கியவனாக இருத்தல், தனக்கு பிரியமானது பிரியுமோ, வேண்டாதது நேருமோ என்று அஞ்சும் மனப்பான்மை தான் பயம்.

இவைகள் இல்லாமல் அஞ்சாமல் இருப்பது அச்சம் நீங்கி இருப்பதாகும். மனத்தூய்மை, தத்துவஞானம், பெறுவதற்காக தியான யோகத்தில் இடையறாது உறுதியாக நிலை பெற்றிருத்தல்.

சாத்விகமான தானம்,
புலனடக்கம், பகவான், தேவதைகள், பெரியோர்களுக்கு பூசை, அக்கினி கோத்திரம் முதலிய நற்கர்மங்களைக் கடைப்பிடித்தல்.

வேதங்களையும், சாஸ்திரங்களையும், கற்றல், கற்பித்தல், பகவானுடைய நாம, குண கீர்த்தனம் செய்தல், சுயதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்தல், உடல், புலன்களுடன் கூடிய அந்தக்  காரணங்களின் நேர்மை முதலிய இலக்கணங்கள் தவத்திற்கு அங்கங்களாகக் கூறப்படுகிறது.  

மனம், மொழி, மெய்  இவற்றால் எவர்க்கும் எவ்விதமான தீங்கும் இழையாமை, உள்ளம் அறிந்த உண்மையை இனிமையாக எடுத்துரைத்தல்.

Share.

Leave A Reply