அதனால்தான் எனது பிரகாசமான வெளிச்சத்திற்குள் இவர்களால் வர முடியவில்லை என்கிறார்.

மேலும், நான் பூமியினுள் புகுந்து என் சக்தியினால் உயிரினங்கள் அனைத்தையும் தாங்குகிறேன்.

அமுதமானது சந்திரன் தான், இதன் உள்ளும் புறமும் அமுதம் நிறைந்தது. பொருட்களில் உள்ள ரசம் எல்லாம் சந்திரன் கொடுத்தது தான்.

இலை,பூ, பழங்கள் முதலிய பகுதிகளுடன் கூடிய மரங்கள், செடி, கொடிகள், புல், பூண்டுகள், பயிர், பச்சைகள் போன்ற தாவர வகைகள் ஓஷ மண்டலம், சந்திரனிடம் உள்ள நிலவு எல்லாம் என்னுடைய ஒரு அம்சம். இவ்வாறு சந்திரனாக வெளிப்பட்டு எல்லா சுகங்களையும் கொடுக்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.

உடலில் உள்ள வெப்பத்தினால் உண்ட உணவு சீரணமாகிறது. அப்படி அனைத்து உயிரினங்களில் உடல்களிலும் உள்ள வெப்பத்திற்குக் காரணமான அக்கினியின் ஒளிரும் சக்தி என்னுடையதே.

பசி விளைவிக்கும் ஆற்றலும் கூட என்னுடைய சக்தியின் ஓர் அம்சம்தான். கடித்து உண்பது, விழுங்கி உண்பது, நக்கி உண்பது, உறிஞ்சி உண்பது என்ற நால்வகை உணவுகளையும் சீரணமாக்குகிறேன்.

நானே, எல்லா பிராணிகளுடைய இதயத்திலும் குடி கொண்டு இருக்கிறேன். என்னிடம் இருந்துதான் அறிவு,ஐயம், திரிபுகளில்  இருந்து தெளிவும் ஏற்படுகின்றது.

எல்லா வேதங்களாலும் நானே அறியத் தக்கவன். வேதாந்தத்தைச் செய்தவனும், வேதங்களின் உட்பொருள் அறிந்தவனும் நானே என்கிறார் கிருஷ்ணன்.

அதாவது, முன்னாள் கண்டு, கேட்டு, அனுபவிக்கப்பட்ட பொருள், நிகழ்வுகளை நினைவு கூறுவது, ஒவ்வொரு பொருளையும் பற்றிய உண்மையை அறியும் திறன் பொருட்களைப் பற்றிய சந்தேகம் விபரீத எண்ணங்கள் இவை மூன்றும் என்னிடம் தான் கிடைக்கின்றன.

அனைத்து வேதங்களுக்கும் முடிவான நோக்கு உலகியலில் வைராக்கியத்தை உண்டு பண்ணி யார் யாருக்கு எந்த தகுதி உள்ளதோ அதற்கு தகுந்த ஞானம் ஏற்படச் செய்வதாகும் என்கிறார்.
 

Share.

Leave A Reply