பதினைந்தாவது அத்தியாயம் 

புருசோத்தம யோகம்

இந்த அத்தியாயத்தில் அகில பிரபஞ்சத்தையும் படைத்து, காத்து, தம்முன் அடக்கி ஒடுக்கிக் கொள்ளும் சர்வ வல்லமை படைத்த பரமேஸ்வரனே சரண்புகத் தக்கவர்.

அவர் தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும், தோழனாகவும், சகலமும் ஆக இருக்கும் பரமாத்மாவை புருசோத்தமன் என்று ஏன் அழைக்க வேண்டும் அதன் சிறப்பு என்ன, அவரை எப்படி அடையலாம் என்ற விபரங்கள் நன்கு விளக்கப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு ‘புருசோத்தம யோகம்’ என்று பெயர்.

அர்ச்சுனா! ஒரு அரச மரத்தை வைத்து கூறுகிறேன் கேள். பரமேஸ்வரன் மரத்தின் வேராக உள்ளவரை அது அழியாது. நடுமரமாக பிரம்ம தேவனும், கிளையாக பிரபஞ்சமும், இலைகளாக வேதங்களும் இருப்பதை தத்துவ ரீதியாக எவன் அறிகிறானோ, அவனே வேதத்தின் உட்கருத்தை அறிந்தவர் ஆவார்.

பிரபஞ்சம் என்ற அரச மரத்தின் கிளைகள் முக்கணங்கள், நீரினால் வளர்ந்து புலன் நுகர் பொருட்களாகிய தளிர்களுடன் கூடி தேவ, மனித, விலங்கு முதலிய பிறவி உருவாகிறது.

மனிதப் பிறவியின் கர்மங்களுக்கு ஏற்றவாறு பிணைக்கின்றவையான அகந்தை, மமதை, வாசனை, உருவான வேர்களும் கீழும், மேலுமாக எல்லா உலகங்களிலும் பரவியுள்ளன.

அர்ச்சுனா! சம்சாரம் என்னும் மரத்தில் ஆதியும் இல்லை முடிவும் இல்லை அதாவது அகங்காரம், மமகாரம் முன்வினை வாசனை என்ற வேர்கள் கொண்ட சம்சாரம்  உருவான அரச மரத்தை.

வைராக்கியம் என்ற கோடாரியால் வெட்டி எறிந்துவிடு. ஏனெனில், மரம் தத்வஞானம் பெற்ற பிறகு ஆராய்ந்து பார்த்தால், அழியக்கூடியது. நொடிப் பொழுதில் மறையக்
கூடியது என்று தெரிய வருகிறது என்கிறார்.

சம்சார மரம் சொற்களால் விளக்க இயலாதது. சம்சார கற்பத்தின் ஆதியில் உண்டாகி கற்பத்தின் முடிவில் மறைந்து விடுகிறது.

Share.

Leave A Reply