கேசவா! ‘பிரம்மத்தை அடைய தகுதி பெறுகிறான்’ என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

குணாதீீத நிலையை அடைந்தவன் பிரம்மத்தை அடையவும் தகுதி பெறுகிறான். குணம் அற்ற, உருவமற்ற சத்,சித், ஆனந்தமயமான பூரண பிரம்மத்தை அடைகிறான்.

பிரம்மத்தை அடைந்தவனுக்கு அடைய வேண்டியது வேறு ஒன்றும் இல்லை. பிரம்மத்துடன் இரண்டறக் கலக்கும் தகுதியைப் பெறுகிறான். உடனே, அவனுக்கு பிரம்ம நிலை கிடைத்து விடுகிறது.

அர்ச்சுனா! அழிவற்றதான பரபிரம்மத்திற்கும், இறவா நிலைக்கும் எப்பொழுதும் இருக்கக்கூடிய தர்மத்திற்கும் வேறுபாடற்ற ஒரே சீரான ஆனந்தத்திற்கும் உறைவிடம் நானே என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! ‘பிரம்மத்திற்கு நானே உறைவிடம்’ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! பிரம்ம சகுணமான பரமேஸ்வரன் ஆகிய என்னைத் தவிர வேறல்ல பிரம்மத்தை அடைவது என்னை அடைவதாகும்.

சிவபெருமான், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் முதலிய பகவானுடைய சகுணமான உருவமுள்ள விஸ்வரூபமும் அகில உலகமும் பகவானுடைய விராட் ரூபமே என்கிறார் கிருஷ்ணன்.

‘தர்மங்களைக் கடைப்பிடிப்பவர்கள் வேறு பயனைப் பெறுவதில்லை, என்னைத்தான் அடைகிறார்கள். அவர்களுக்கு உறைவிடம் நானே, என்றும் உள்ள அந்தப் பரமானந்தம் நானே,  என்னைத் தவிர வேறு பொருளே கிடையாது. ஆகவே, பரமானந்தத்தை  அடைவதும், என்னை அடைவதும்  ஒன்றுதான்’ என்கிறார் கிருஷ்ணன்.

பதினான்காவது அத்தியாயம் நிறைவுற்றது.

Share.

Leave A Reply