அர்ச்சுனா! உடலிலும், உள்ளத்திலும், சக்தியின் ஒளி வெளிப்பாடும், விவேக ஞானமும் உண்டாகிறதோ, அப்போதே சத்வ குணம் மேலோங்கி உள்ளது என்பதை அறிந்து கொள் என்கிறார் கிருஷ்ணன்.

மேலும், சத்வ குணத்தின் உதவியுடன் மனிதன் மோட்சத்தை அடைய முடியும். மற்ற பிறவிகளில் இந்த வாய்ப்புகள் கிடையாது.

எனவே, இந்த வாய்ப்பை அலட்சியப்படுத்தாமல் எச்சரிக்கையுடன் தன் மனதை வழிபாடு, தியானம் இவற்றில் ஈடுபடுத்தி உயர்வு கொள்ள வேண்டும்.

இல்லை என்றால், ராஜச, தாமச குணங்கள் அழுத்தி அதன் செயல்பாட்டைத் தொடங்கி விடும்.

விவேகம் விழித்து இருப்பது தான் ‘ஞானம்’ உண்டாவதாகம். பிரகாசமும், விவேக ஞானமும், உண்டாகும் போது இயல்பாகவே உலகியலில் வைராக்கியமும், மனதில் ஓய்வும் உண்டாகி வெள்ளம் போல சுகமும், அமைதியும் பெருகிவரும்.

விருப்பு, வெறுப்பு, துக்கம், சோகம், கவலை,பயணம், சஞ்சலம், தூக்கம், சோம்பல், கவனமின்மை இவைகள் இல்லாதது போல் ஆகிவிடும் என்கிறார்.

அர்ச்சுனா! ராஜச குணம் அதிகமாகும் போது பேராசை, உலகியல் கர்மங்களில் ஈடுபாடு, தன்னலத்தில் பற்றுள்ள செயல்களைச் செய்வது அமைதியின்மை, உலகியல் நுகர் பொருட்களில் பேராவல்  உண்டாக காரணமாக இருக்கின்றது.

அர்ச்சுனா! செல்வத்தில் உள்ள பேராசை காரணமாக ஒவ்வொரு கணமும் மனிதன் செல்வத்தைப் பெருக்குவது எப்படி என்று சிந்திக்கிறான்.

செல்வத்தை செலவழிக்கத் தக்க தருணம் வந்தால் கூட செலவு செய்ய முன் வருவதில்லை.

செல்வத்தை சம்பாதிக்கும் போது செய்யத்தக்கது எது, தகாதது எது என்று ஆராய்வதில்லை. பிறர் சொத்தில் உரிமை செலுத்த விரும்பத்துடன் முனைகிறான்.

பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுவது பற்றி மனதில் புதிய எண்ணங்கள் தோன்றுகின்றன. மனம் சஞ்சலம் அடைகிறது.

பிறகு அந்த எண்ணங்களுக்கு ஏற்றவாறு செயல்பரிய ஆரம்பிக்கின்றான். இவ்விதம் ராஜச குணப் பெருக்கத்தின் போது பேராசை உணர்வுகள் உண்டாகின்றன என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! தாமச குணம் அதிகமாகும் போது புலன்களில் ஒளி இன்மை செய்ய வேண்டிய கடமைகளில் ஈடுபாடின்மையும், அசட்டைத் தனமும், வீண் செயல்களில் ஈடுபாடும், தூக்கம் போன்ற இவை அனைத்தும் உண்டாகின்றன.

அதாவது புலன்களின் விழிப்பின்மை, இல்லாத போது அத்தனை தாமச குணமும் மேலாகிவிட்டது என்பதை மனிதன் அறிய வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.

எப்பொழுது மனிதன் சத்வ குணம் பெருகி இறப்பை அடைகிறானோ, அப்பொழுது உயர்ந்த செயல்கள் செய்பவர்களுடைய நிர்மலமான சொர்க்கம் முதலிய புண்ணிய உலகை அடைவார்கள்.

Share.

Leave A Reply