கேசவா!கர்மங்களின் சங்கம் என்றால் என்ன? என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! இந்தக் கர்மங்களை நான் செய்கிறேன். கர்மங்களுக்கு நான் கடவுள் என்ற அபிமானம் ஏற்பட்டு…

இதைச் செய்வதால் இந்தப் பயன் கிடைக்கும் என்று கருதி கர்மங்களுடனும், அவற்றின் பயன்களுடனும் தொடர்பை நிலை நிறுத்திக் கொள்வது கர்ம சங்கம் ஆகும். 

இதன் மூலம் ஆத்மா பிறப்பு, இறப்பு வடிவான சம்சாரத்தில்  சிக்க வைக்கிறது. கர்ம சங்கத்தின் மூலம் உடல் உள்ள ஆத்மாவிற்கு பந்தம் ஏற்படுகிறது என்கிறார் கிருஷ்ணன்.

3- அர்ச்சுனா! உடற் பற்றுடைய எல்லோரையும் மயக்கக்கூடிய தாமச குணம் அஞ்ஞானத்தில் இருந்து உண்டானதாக அறிந்து கொள்.

வீணான செயல்களில் ஈடுபடுத்துவது சோம்பல், தூக்கம், இவற்றால் கட்டப்படுகிறது. உள்ளத்திலும் புலன்களிலும் அறியும் சக்தியை இழக்கச் செய்து மயக்கத்தை உண்டாக்குவதையே தாமசகுணம். உடல் பற்றுடைய அனைவரையும் மயக்கும் தன்மை உடையது. புலன்களும், உள்ளமும் வீண் செயல்களில் ஈடுபடுவதும், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் அவற்றை இகழ்வதும்.

கடமைகளை ஆற்றுவதில் முயற்சி மேற்கொள்ளாமல் இருப்பது. சோம்பல், களைப்பு, ஆழ்ந்த உறக்கம் இவைகளினால், தாமச குணம் ஏற்பட்டு பரம முக்தியை அடையும் சாதனைகள் செய்ய விடாமல் தடுத்து பிறப்பு, இறப்பு வடிவான சம்சாரத்தில் சிக்க வைக்கிறது என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! சத்வ குணம்  சுகத்தில் ஈடுபடுகிறது. ராஜசகுணம் போக செயலில் ஈடுபடுத்துகிறது. தாமச குணம் வீணான செயல்களால் ஞானத்தை மறக்கச் செய்கிறது.

அர்ச்சுனா! ராஜச குணத்தையும், தாமச குணத்தையும் அடக்கி சத்வ குணம் மேலோங்குகிறது. சத்வ குணத்தையும், தாமச குணத்தையும் அடக்கிய ராஜசகுணம்
மேலோங்குகிறது. சத்துவ குணத்தையும் ராஜச குணத்தையும் அடக்கி தாமச குணம் மேலோங்குகிறது.

அதாவது ராஜச, தாமச குணங்களை அடக்கி சத்வ குணம் மேலாங்கும்போது உடல், மனம், புலன்கள் எல்லாம் பிரகாசமாகி விவேகம், வைராக்கியம் ஆகியவை மிகுந்து சுகமாகவும், அமைதியாகவும் இருக்கிறான். மற்ற இரு குணங்களும் அடக்கி சத்வ குணம் மேலோங்குவதாகும்.

சத்வ,ராஜச குணங்களை அடக்கி, தாமச குணம் மேலோங்கும் போது உடல், புலன்கள், உள்ளம் இவற்றில் மோகம் வளர்கிறது. வீணான செயல்களில் ஈடுபாடு உண்டாகிறது.

சத்வ குணத்தில் உள்ள அறிவும், ஒளியும் ராஜச குணத்தின் போகப் பொருட்களை அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பமும் இல்லாமல் போய் சோம்பல், தூக்கம் இவைகள் மேலோங்கி தாமச குணம் வெளிப்படுகிறது என விவரித்துக் கூறுகிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply