பெரிய படைப்பின் ஆரம்பத்தில் தத்தம் சம்சாரங்களுடன் உயிர் உள்ள சமுதாயம் ஏற்படுகிறது. அதனால், அது தான் சேர்தல் தொகுப்பின் கர்ப்பத்தை கர்ப்பப்பையில் சேர்ப்பதாகும்.
தத்தம் கர்ம வினைப் பயனுக்கு ஏற்ப தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் முதலிய பற்பல பிறவிகள் உற்பத்தியாகின்றன.
உற்பத்தி மகா பிரளயத்திற்குப் பிறகு மகா பிறப்பின் ஆரம்பத்தில் மேலே சொன்ன இணைப்பில் இருந்து முதன் முதலாக கிரண்யகர்பனும், அதன் பின் மற்ற சராசரங்களும் உண்டாகின்றன.
அர்ச்சுனா! பலவிதமான அனைத்துப் பிறப்பிடங்களிலும் எத்தனை உருவங்கள், உடல்கள் கொண்ட உயிர்கள் உண்டாகின்றனவோ, அவை எல்லாவற்றிற்கும் பிறப்பிடமான கருத்தரிக்கும் தாயும் நானே, விதை அளிக்கும் தந்தையும் நானே என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! சத்வ குணம், ராஜச குணம், தாமச குணம் இம்மூன்று குணங்களும் வெவ்வேறு ஆனவை. இவற்றை அழிவற்ற ஆத்மா அழியக்கூடிய உடலில் கட்டுகின்றன.
அதாவது, உடலின் போகப் பொருட்களிலும், மமகாரம், பற்று, அபிமானம் இவற்றை உண்டாக்குவதே முக்குணங்கள். இதுவே, உடலைக் கட்டுவதாகும்.
அர்ச்சுனா! இந்த முக்குணங்களில் சத்வ குணம் தூய்மையானது. ஒளி கொடுக்கக் கூடியது விகாரம் அற்றது. இருந்தாலும் இன்பத்தினாலும், ஞானத்தினாலும் கட்டப்படுகின்றது.
1- கேசவா!சத்வகுணம் மனிதனை இன்பம், ஞானம் இவற்றின் தொடர்பினால் கட்டுகிறது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன்.
அர்ச்சுனா! சுகம் என்பதன் இலக்கணம் சாத்வீக குணம் அடையும் போது, நான் சுகமாக இருக்கிறேன் என்று அபிமானத்தில் அந்த சுகத்தின் மீது தொடர்பு ஏற்படுகிறது.
இதனால், சாதனை வழியில் மேலே செல்ல விடாமல் அவனைத் தடை செய்கிறது. இதனால், முக்தி நிலையை அடைய முடியாமல் சுகத்தின் தொடர்பினால் மனிதன் பந்தப் படுகிறான் என்கிறார்.
ஞானம் என்றால் அறிவாற்றல். அது வெளிப்பட்டால், “நான் ஞானி” என்று அபிமானம் கொள்ள வைக்கிறது. அதற்கு மேல் உள்ள நிலையை அடைய விடாமல் தடுக்கிறது. இதுவே, சத்வ குணம் மனிதனை ஞானத்தினால் கட்டுவது ஆகும்.
அகம் என்பது பாவம் முற்றும் அற்றவன் பாவம் அற்றவன் ஆவான். அர்ச்சுனா! நீ பாவங்கள் அறவே அற்றவன் உனக்கு இயல்பாகவே பாவங்கள் கிடையாது. ஆகவே, உனக்கு பந்தம் என்ற பயம் வேண்டாம் என்கிறார் கிருஷ்ணன்.
2- அர்ச்சுனா! விருப்பு வடிவாகிய ராஜச குணம், ஆசை, பற்றி இவற்றில் உண்டானது என்று அறிந்து கொள்.
இது மனிதனை கர்மங்களிலும், கர்மங்களின் பயன்களிலும் உள்ள தொடர்பால் கட்டப்படுகிறது என்கிறார்.
ஆசையினாலும், பற்று தலினாலும் ராஜச குணம் வளர்கிறது. ராஜச குணத்தால் ஆசையும் பற்றும் பெருகுகின்றது.
அதாவது, விதையும், மரமும் போல ஒன்றுக் கொன்று தொன்று தொட்டு தொடர்பு உள்ளது. விதையினால் மரம் உண்டாகிறது மரத்தில் இருந்து விதை உண்டாகிறது. இது போல் தான் ராஜச குணமும் ஒன்றுக்கொன்று உற்பத்தி ஆகின்றது என்கிறார் கிருஷ்ணன்.