கேசவா! பரமாத்மா எங்கும் நிறைந்தவர். அப்படி இருக்க இதயத்தில் சிறப்பாக விளங்குவது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! ஆதவன் உடைய ஒளி அனைத்து இடங்களிலும் சமமாகப் பரவினாலும், கண்ணாடியில் நன்றாக பிரதிபலிக்கின்றது. பூதக் கண்ணாடியில் நெருப்பு கூட உண்டாகின்றது. மற்ற பொருட்களில் அப்படி ஏற்படுவதில்லை அதுபோல…

பரமாத்மா எங்கும் சமமாக நிறைந்து இருந்தாலும் இதயங்களில் தான் அவருடைய சிறப்பான வெளிப்பாடு தெரிகிறது. பரமாத்மாவை உணரும் இடம் இதயம்.

ஞானியின் இதயத்தில் அவர் நேராக வெளிப்படுகிறார். இதை விளக்குவதற்காகவே இங்கு அனைவருடைய இதயங்களிலும் சிறப்பாக வீற்றிருக்கிறார் என்று கூறுகிறார் கிருஷ்ணன்.

இவ்விதம் இந்த மனித உடம்பின் ரூபமும், ஞானமும் அறிய வேண்டிய பரமாத்மா ரூபமும் சுருக்கமாக சொல்லப் பட்டிருக்கிறது.

என்னுடைய பக்தன் இதை தத்வரீதியாக அறிந்து என்னுடைய சுயரூபத்தை அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன்.

மனிதனுடைய உயிர் எந்த உடம்பில் இருப்பினும் அது உண்மையில் பரமாத்மா தான் சாட்சியாக இருக்கிறார். உண்மையான ஒப்புதல் அளிக்கிறார். எல்லோரையும் தாங்கி காப்பாற்றுகிறார்.

தேவர்களுக்கு எல்லாம் தலைவர் ஆகவும் சுத்த சத், சித், ஆனந்த ரூபனான மகேஸ்வரனாகவும் இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.

என்னுடைய ரூபத்தையும், குணத்தையும் எந்த மனிதன் தத்துவ ரீதியாக அறிவானோ அவன் எல்லா விதங்களிலும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கொண்டிருந்தால் கூட மறுபடியும் பிறப்பதில்லை.

பரமாத்மாவை சில மனிதர்கள் தாய்மை அடைந்த நுண்ணிய புத்தியினால் தியானத்தின் மூலமாக இதயத்தில் பார்க்கிறார்கள்.

மற்றும் சிலர் ஞான யோகத்தின் மூலமாகவும், வேறு சிலர் கர்ம யோகத்தின் மூலமாகவும் பார்க்கிறார்கள்.

விவேகம், வைராக்கியம், மற்றும் சமம், தமம், உபாதி திதிசா, சிரத்தை, சமாதானம் இந்த ஆறு பண்புகளும், மோட்சத்தில் நாட்டம் இவை நான்குமே நான்கு சாதனையாகும்.

விவேகம், வைராக்கியம் மற்றும் ஆறு பண்புகளை அடைந்த பிறகு சாதகன் இயற்கையாகவே இப்பிறவியில் இருந்து விடுபட விரும்புகிறான்.

எல்லாப் பக்கங்களில் இருந்தும் மனதை மீட்டு வேறெதிலும் மனதைச் செலுத்தாமல் பரமாத்மா ஒருவரை நோக்கியே மனதைச் செலுத்துவான்.

இவ்விதம் பரமாத்மாவைக் குறித்து மனம் வேகமாக ஓடத் தலைப்படுதலே தீவிர சாதனையே உள்ளத்தின் ஆழத்தில் உள்ள பர்மாத்மாவை அடைந்து விட வேண்டும் என்ற அவனது தீவிரமான ஆசையைக் காட்டுகிறது. இதுவே, மோட்சத் தத்துவம் ஆகும் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply